மீண்டும் பாதம்...

கொளுத்தி எடுக்கும் வெயிலில்
வறுத்தெடுக்கும் வளைகுடாவில் நான்;
தொட்டுப் பார்க்க முடியா
தொலைத் தூரத்தில் நீ;

இங்கே நண்பர்களுடன்
கும்மாளமாய் கூடி இருந்தாலும்
குருதி வடியும் உள்ளத்தில்
அவரவர் வீட்டை நினைக்கையிலே!

தடபுடலாய் விருந்து என்றாலும்
தடுமாறும் மனது;
அங்கே  நீ சாப்பிட்டாயோ என்று!

விடியாதோ நமக்கு
போர்க்களமாய் இந்த பிரிவு;
அழுதுவடிந்தாலும் அடுத்த நிமிடம்
துடைத்துவிட்டு அலுவலகம் செல்லும்
எந்திர வாழ்க்கை!

ஆண்டுக்கு ஒரு மாதத்திற்காக
அலுக்காமல் உழைப்போம் இங்கே;
விடுப்பு முடிந்ததும் குடும்பத்தோடு
வழியனுப்பும் விழா விமான நிலையத்தில்..
வளைகுடா என எண்ணி நீங்கள்..
மீண்டும் பாதம் அனாதை இல்லத்தை நோக்கி!!!
கொளுத்தி எடுக்கும் வெயிலில்
வறுத்தெடுக்கும் வளைகுடாவில் நான்;
தொட்டுப் பார்க்க முடியா
தொலைத் தூரத்தில் நீ;

இங்கே நண்பர்களுடன்
கும்மாளமாய் கூடி இருந்தாலும்
குருதி வடியும் உள்ளத்தில்
அவரவர் வீட்டை நினைக்கையிலே!

தடபுடலாய் விருந்து என்றாலும்
தடுமாறும் மனது;
அங்கே  நீ சாப்பிட்டாயோ என்று!

விடியாதோ நமக்கு
போர்க்களமாய் இந்த பிரிவு;
அழுதுவடிந்தாலும் அடுத்த நிமிடம்
துடைத்துவிட்டு அலுவலகம் செல்லும்
எந்திர வாழ்க்கை!

ஆண்டுக்கு ஒரு மாதத்திற்காக
அலுக்காமல் உழைப்போம் இங்கே;
விடுப்பு முடிந்ததும் குடும்பத்தோடு
வழியனுப்பும் விழா விமான நிலையத்தில்..
வளைகுடா என எண்ணி நீங்கள்..
மீண்டும் பாதம் அனாதை இல்லத்தை நோக்கி!!!

No comments:

Post a Comment