அகதிகள் நாங்கள்...


கூட்டமாய் நானிருந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உலகமேக் கொண்டாடும் ஒருநாளில் பெருநாள்
ஆனால் நாம் மட்டும் தனித்தனியாக!

விடிய விடிய விளக்கெரிந்தாலும்
அழுது வடிவது யாருக்கும் தெரியாது;
வாழ்த்துக்களை அலைபேசியில் சொல்வதே
வாடிக்கையாகிவிட்டது நமக்கு!

உழைக்க வந்த இடத்தில்
சமைக்கக் கற்றுக்கொண்டேன்;
மறுத்துவிட்டால் மறுவேளை
ஊர்க்கதையை அசைப்பதற்கு
உணவில்லை உண்பதற்கு!

வாரத்திற்கு ஒரு முறை
வாரிக்கொள்ள வசந்தமாய்
எங்களுக்கொரு இடமுண்டு;
தமிழ் பஜார் என்றொருப் பெயருண்டு!

கால் கடுக்க நின்றாலும்
கதைப்பேசிக் கொண்டிருபோம்;
ஒரு டீயை கரம் ஏந்தி
ஒருவாரத் தகவல் பெற்றிடுவோம்!

சின்ன சின்ன சந்தோஷத்தோடு
காலம் காலமாய்
காலமாகும்  வயது வரை;
அகப்பட்ட அனாதைகளாய் அரபுதேசத்தில்;
அக்மார்க் குத்தப்படாத அகதிகள் நாங்கள்!

கூட்டமாய் நானிருந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உலகமேக் கொண்டாடும் ஒருநாளில் பெருநாள்
ஆனால் நாம் மட்டும் தனித்தனியாக!

விடிய விடிய விளக்கெரிந்தாலும்
அழுது வடிவது யாருக்கும் தெரியாது;
வாழ்த்துக்களை அலைபேசியில் சொல்வதே
வாடிக்கையாகிவிட்டது நமக்கு!

உழைக்க வந்த இடத்தில்
சமைக்கக் கற்றுக்கொண்டேன்;
மறுத்துவிட்டால் மறுவேளை
ஊர்க்கதையை அசைப்பதற்கு
உணவில்லை உண்பதற்கு!

வாரத்திற்கு ஒரு முறை
வாரிக்கொள்ள வசந்தமாய்
எங்களுக்கொரு இடமுண்டு;
தமிழ் பஜார் என்றொருப் பெயருண்டு!

கால் கடுக்க நின்றாலும்
கதைப்பேசிக் கொண்டிருபோம்;
ஒரு டீயை கரம் ஏந்தி
ஒருவாரத் தகவல் பெற்றிடுவோம்!

சின்ன சின்ன சந்தோஷத்தோடு
காலம் காலமாய்
காலமாகும்  வயது வரை;
அகப்பட்ட அனாதைகளாய் அரபுதேசத்தில்;
அக்மார்க் குத்தப்படாத அகதிகள் நாங்கள்!

No comments:

Post a Comment