இறுதியாக அவள் நெற்றியில் ஒரு முத்தம்என்னையும் அறியாமல்
என் உதடுகள் இரண்டும்
எதிர் எதிர் திசையில்
பிரவேசிகின்றனப்
புன்னகையாய்!

என் கால்கள்
என் தேசத்தை நோக்கி;
இல்லையில்லை
என் நேசத்தை நோக்கி!

இறங்கியதும் ஏனோ
ஒரு சின்னச் சலிப்பு,
ச்சே , இன்னும் நம் ஊரு
அப்படியேதான் உள்ளது!

வாசலுக்கே
வந்து விட்டால் என் அம்மா!
கட்டித் தழுவி கதறினால்;
இந்த முறை;
அனுப்பி வைக்கும்போது
இருந்ததை விட!

கதவின் ஓரத்தில்,
பாவம் என் மனைவி;
இந்த முறையும்
அழுதுக் கொண்டே
ஆனால் சிரித்துக் கொண்டே!


சிரித்த முகத்துடனே
அவளை நெருங்கினேன்,
அவள் அழுதுக் கொண்டேச்
சொன்னால் "சலாம்"

விருந்தும் முடிந்தது தடபுடலாய்;
எல்லோரும் கேட்டார்கள்;
வெளி நாடு எப்படி இருக்கு என்று?
சற்றேத் தடுமாறிச் சொன்னேன்;
அருமை அருமை,

முடியக் காத்திருந்தது விடுப்பும்;
வெறுப்பாய் பார்த்தேன் காலெண்டரை!
இவ்வளவு வேகமா?

வாய் இருந்தால்
காலெண்டர் கேட்டு இருக்கும்;
அடப் பாவி !
போன மாதம் வரை
நாள் ஓடவில்லை என்று திட்டினாய்
இப்போது ஏன் ஓடினாய் என்று !

வாடிப் போன என் முகம்,
வாழ்க்கையே இப்படித்தானோ?
ஒரு மாத விடுப்பிற்கு
ஒரு வருட கால பயிற்சி!

இறுதியாக அவள் நெற்றியில் ஒரு முத்தம்;
என்ன நினைத்தாலோ தெரியவில்லை
சற்றென்றுச் சில  சொட்டுக்
கண்ணிர் என் சட்டையில்!

ஈரமாய் என் சட்டை - இப்போது
தூரமாய் என் மனைவி!
காய்ந்து விட்டது என் சட்டையும் என்
கண்களும்!

வறண்டு போன என்
ஊரைப் பார்த்தபடியேக் காருக்குள் நான்;
இப்போதுக் கொஞ்சம் கொஞ்சமாக
அழகாய் தெரிய ஆரம்பிகிறது !!!!


என்னையும் அறியாமல்
என் உதடுகள் இரண்டும்
எதிர் எதிர் திசையில்
பிரவேசிகின்றனப்
புன்னகையாய்!

என் கால்கள்
என் தேசத்தை நோக்கி;
இல்லையில்லை
என் நேசத்தை நோக்கி!

இறங்கியதும் ஏனோ
ஒரு சின்னச் சலிப்பு,
ச்சே , இன்னும் நம் ஊரு
அப்படியேதான் உள்ளது!

வாசலுக்கே
வந்து விட்டால் என் அம்மா!
கட்டித் தழுவி கதறினால்;
இந்த முறை;
அனுப்பி வைக்கும்போது
இருந்ததை விட!

கதவின் ஓரத்தில்,
பாவம் என் மனைவி;
இந்த முறையும்
அழுதுக் கொண்டே
ஆனால் சிரித்துக் கொண்டே!


சிரித்த முகத்துடனே
அவளை நெருங்கினேன்,
அவள் அழுதுக் கொண்டேச்
சொன்னால் "சலாம்"

விருந்தும் முடிந்தது தடபுடலாய்;
எல்லோரும் கேட்டார்கள்;
வெளி நாடு எப்படி இருக்கு என்று?
சற்றேத் தடுமாறிச் சொன்னேன்;
அருமை அருமை,

முடியக் காத்திருந்தது விடுப்பும்;
வெறுப்பாய் பார்த்தேன் காலெண்டரை!
இவ்வளவு வேகமா?

வாய் இருந்தால்
காலெண்டர் கேட்டு இருக்கும்;
அடப் பாவி !
போன மாதம் வரை
நாள் ஓடவில்லை என்று திட்டினாய்
இப்போது ஏன் ஓடினாய் என்று !

வாடிப் போன என் முகம்,
வாழ்க்கையே இப்படித்தானோ?
ஒரு மாத விடுப்பிற்கு
ஒரு வருட கால பயிற்சி!

இறுதியாக அவள் நெற்றியில் ஒரு முத்தம்;
என்ன நினைத்தாலோ தெரியவில்லை
சற்றென்றுச் சில  சொட்டுக்
கண்ணிர் என் சட்டையில்!

ஈரமாய் என் சட்டை - இப்போது
தூரமாய் என் மனைவி!
காய்ந்து விட்டது என் சட்டையும் என்
கண்களும்!

வறண்டு போன என்
ஊரைப் பார்த்தபடியேக் காருக்குள் நான்;
இப்போதுக் கொஞ்சம் கொஞ்சமாக
அழகாய் தெரிய ஆரம்பிகிறது !!!!

2 comments:

 1. /ஈரமாய் என் சட்டை - இப்போது
  தூரமாய் என் மனைவி!
  காய்ந்து விட்டது என் சட்டையும் என்
  கண்களும்!/

  நல்லா இருந்தது..

  ReplyDelete
 2. சகோதரே உங்கள் கவிதையை படிக்கும்போது இதயமும் ஈரமானதாகவே இருகிறது...

  எப்போது மாறும் இந்நிலை ... உங்கள் கவிதையை என்னால் ரசிக்க முடியவில்லை ஏனெனில் உங்களின் இக்கவிதையின் வாசகன் அல்ல மாறாக வாழ்பவன் உங்கள் கவிதையாய்...

  ReplyDelete