ஒவ்வாமை!!

தட்டிக் கேட்க யாருமில்லையென
கொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;
வீழ்ந்துக்கிடக்கும் விதைகளாய் எம்
உடன் பிறவா  உயிர்கள்!

தேசம் தாண்டிப் போனாலும்
மோசம் போகும் ஒரே சமுதாயம்;
அனலோடு கொதிக்கும் குருதி
நினைவோடு நிற்கும்!

கேட்டுக் கேட்டு அழுத்துப் போன
எங்களின் ஓலம் உலகத்திற்கு;
மரத்துப் போன மனித நேயம்
துடித்து  எழும் ஆடுக்கும் மாடுக்கும் 
மட்டும்!

இறந்தாலும் இறவாத
எங்களுடைய்ய சோகம்;
மறந்துப் போன மார்க்கத்தால்
நொடிந்துப் போன எங்கள் வேகம்!

தயக்கத்தால் தள்ளாடும்
எங்கள் ஒற்றுமை;
இயக்கத்தால் எங்களுக்கு வந்த
ஒவ்வாமை!!
தட்டிக் கேட்க யாருமில்லையென
கொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;
வீழ்ந்துக்கிடக்கும் விதைகளாய் எம்
உடன் பிறவா  உயிர்கள்!

தேசம் தாண்டிப் போனாலும்
மோசம் போகும் ஒரே சமுதாயம்;
அனலோடு கொதிக்கும் குருதி
நினைவோடு நிற்கும்!

கேட்டுக் கேட்டு அழுத்துப் போன
எங்களின் ஓலம் உலகத்திற்கு;
மரத்துப் போன மனித நேயம்
துடித்து  எழும் ஆடுக்கும் மாடுக்கும் 
மட்டும்!

இறந்தாலும் இறவாத
எங்களுடைய்ய சோகம்;
மறந்துப் போன மார்க்கத்தால்
நொடிந்துப் போன எங்கள் வேகம்!

தயக்கத்தால் தள்ளாடும்
எங்கள் ஒற்றுமை;
இயக்கத்தால் எங்களுக்கு வந்த
ஒவ்வாமை!!

No comments:

Post a Comment