எத்தனை நாளைக்கு..

எத்தனை முறை பேசினாலும்
தினமும் உன் குரலுக்காக;
உன் உள்ளம் மட்டும்
உருகி உருகி நிற்கும் என் வரவுக்காக!

மாலையானதும் எங்கள்
மடிகளில் குழந்தையாக
மடிக்கணிணி;
மணிக்கணக்கில் பேசினாலும்
மாதம் மட்டும் மந்தமாய்!!

ஏற்றாத வருமானத்தால்
இந்த வருடமும் ஏமாற்றம்-உன்னை
அழைத்துவிடுகிறேன்
அடுத்தவருடமாவது ஆறுதல் மட்டும்
அடுக்கடுக்காய்!!

வடியும் உன் விழிகளுக்கு என்
வார்த்தை மட்டும் வடிகாலாய்
எத்தனை நாளைக்கு!!

சிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு
சிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;
புத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்
பூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்
பெருநாள் ஆடை!!

ஈரத்தால் நைந்துப் போன
தலையணையும்; பிய்ந்துப் போன
மனதுடன் கட்டிலின் மடியில் நான்;
இழுத்துப் போர்திக் கொண்டுப்படுத்தாலும்
இதயம் மட்டும் உருத்திக்கொண்டிருக்கும்  
உன்னையே  நினைத்துக்கொண்டிருக்கும்!!

மணமாகி வருடமாயிருந்தாலும்
எண்ணிக்கையில் அடங்கிவிடும்
உன் அருகில் நானிருந்ததை;

பரணியில் கிடந்த விடுப்போ
என்னைக்கண்டு பல் இழிக்க
வந்துவிட்டேன் நாட்டுக்கு;

அள்ளி அணைக்க
துள்ளிக் குதித்து ஒடினேன் – என்
பிள்ளையை நோக்கி;
சிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;
கொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க
நான் மட்டும் திகைத்து நிற்க!

கரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு
கண்ணிருடன் கலங்கி நின்றேன்;
எல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க
நீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க!!
எத்தனை முறை பேசினாலும்
தினமும் உன் குரலுக்காக;
உன் உள்ளம் மட்டும்
உருகி உருகி நிற்கும் என் வரவுக்காக!

மாலையானதும் எங்கள்
மடிகளில் குழந்தையாக
மடிக்கணிணி;
மணிக்கணக்கில் பேசினாலும்
மாதம் மட்டும் மந்தமாய்!!

ஏற்றாத வருமானத்தால்
இந்த வருடமும் ஏமாற்றம்-உன்னை
அழைத்துவிடுகிறேன்
அடுத்தவருடமாவது ஆறுதல் மட்டும்
அடுக்கடுக்காய்!!

வடியும் உன் விழிகளுக்கு என்
வார்த்தை மட்டும் வடிகாலாய்
எத்தனை நாளைக்கு!!

சிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு
சிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;
புத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்
பூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்
பெருநாள் ஆடை!!

ஈரத்தால் நைந்துப் போன
தலையணையும்; பிய்ந்துப் போன
மனதுடன் கட்டிலின் மடியில் நான்;
இழுத்துப் போர்திக் கொண்டுப்படுத்தாலும்
இதயம் மட்டும் உருத்திக்கொண்டிருக்கும்  
உன்னையே  நினைத்துக்கொண்டிருக்கும்!!

மணமாகி வருடமாயிருந்தாலும்
எண்ணிக்கையில் அடங்கிவிடும்
உன் அருகில் நானிருந்ததை;

பரணியில் கிடந்த விடுப்போ
என்னைக்கண்டு பல் இழிக்க
வந்துவிட்டேன் நாட்டுக்கு;

அள்ளி அணைக்க
துள்ளிக் குதித்து ஒடினேன் – என்
பிள்ளையை நோக்கி;
சிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;
கொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க
நான் மட்டும் திகைத்து நிற்க!

கரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு
கண்ணிருடன் கலங்கி நின்றேன்;
எல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க
நீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க!!

No comments:

Post a Comment