தயக்கத்திலே

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!
பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!

1 comment:

  1. கண்ணீர் வரவழைக்கும் கவிதை. ஆழ்ந்த எழுத்து. தூயக் காதலின் முன் ... காரணங்கள்... சொல்ல முடியா வேதனை தரும். சொந்த இரத்தம் துடிக்கும் வலி... இதயம் வாங்கும்... கனம்..! கணத்துப் போகும்.... வாழ்க்கை. பிரிவை தாண்டி பிழியும் உங்கள் எழுத்துக்கு நன்றி. தொடருங்கள். வருகைத் தர...( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete