எங்கே என் தேசம்


உதவி உண்டு எனக் குரல்
மட்டும் கொடுத்து;
கதவுகளைத் தாளிட்ட
உலக நாடுகள்!

உணர்வுகள் மரத்துப்போய்;
உதடுகள் ஊமையாகப்போய்;
உள்ளத்திற்குக் கல்லறைக்
கட்டியிருக்கும் மனிதநேயங்கள்!

துரத்தப்பட்ட அகதிகளுக்கு
இடம் கொடுத்ததால்;
பறிக்கொடுத்தோம்;
கண்ணீருக்குக் கதையுண்டு
வரலாற்றில்;
கண்ணீரேக் கதையாகி;
எங்கள் உயிர்கள்
மண்ணிற்கு விதையாகி!

சிந்தியக் குருதிகள்
எழுத்தாளனுக்கு வரியாய்;
கவிஞனுக்குக் கவியாய்;
பக்கங்கள் நிரப்ப
எல்லோருடைய
எழுதுகோலுக்கும் மையாய்!

தலைமுறைகள் அனாதையாய்;
வரலாற்றுக்குக் கோமாளியாய்;
உலகத்திற்கு ஏமாளியாய்;
பாலஸ்தீனியர்கள் நாங்கள்!

உதவி உண்டு எனக் குரல்
மட்டும் கொடுத்து;
கதவுகளைத் தாளிட்ட
உலக நாடுகள்!

உணர்வுகள் மரத்துப்போய்;
உதடுகள் ஊமையாகப்போய்;
உள்ளத்திற்குக் கல்லறைக்
கட்டியிருக்கும் மனிதநேயங்கள்!

துரத்தப்பட்ட அகதிகளுக்கு
இடம் கொடுத்ததால்;
பறிக்கொடுத்தோம்;
கண்ணீருக்குக் கதையுண்டு
வரலாற்றில்;
கண்ணீரேக் கதையாகி;
எங்கள் உயிர்கள்
மண்ணிற்கு விதையாகி!

சிந்தியக் குருதிகள்
எழுத்தாளனுக்கு வரியாய்;
கவிஞனுக்குக் கவியாய்;
பக்கங்கள் நிரப்ப
எல்லோருடைய
எழுதுகோலுக்கும் மையாய்!

தலைமுறைகள் அனாதையாய்;
வரலாற்றுக்குக் கோமாளியாய்;
உலகத்திற்கு ஏமாளியாய்;
பாலஸ்தீனியர்கள் நாங்கள்!

No comments:

Post a Comment