அக்கறை..


அசைக்கமுடியா நம்பிக்கைக்கு
நட்சத்திரமாய்;
நடுத்தரமானக் குடும்பத்தில்
நங்கூரமாய் நான்;
ஒளிக்கொடுப்பேன் என்று
இருளிலும் உழைப்பைத் தேடி;
ஒடி விடும் தந்தை!

வண்ணக் கனவுகளுடன்
வந்து இறங்கிய இடம் கல்லூரி;
தந்தையின் உழைத்தக் காசுக்கு
நாடகமிட்டு நடனமிடும்
என் பணம் நண்பர்களிடத்தில்!

இல்லாதத் தேர்வுகளால்;
பை நிறையும்;
பணம் வந்துக் குவியும்!
வியர்வையை விதையிட்ட
நீங்கள் கணக்குக் கேட்க;
கண் சிவக்கும் எனக்கு;
கண் கலங்கும் உங்களுக்கு!

பொய்யானக் கோபத்தால்
பொடி நடையிட - என்
தோள் பிடித்துத்
தோல் உரித்துக் காட்டும்
உங்கள் அன்பிற்குச்
செல்லமாய் சிணுங்கி;
கள்ளனாய் கரைவேன்!

விளங்காத விபரங்கள் – இன்று
விளங்கிக்கொண்டேன்;
கண் கலங்கி நின்றேன்;
உழைத்தப் பணத்தின்
உயர்வை உணர்ந்துக்கொண்டேன்!

எண்ணி எண்ணிச்
செலவிடும் எனக்குள்
எட்டிப்பார்க்கும் சிக்கனம்;
புரிந்துக்கொண்டேன்
உங்களின் கரிசனம்!


அசைக்கமுடியா நம்பிக்கைக்கு
நட்சத்திரமாய்;
நடுத்தரமானக் குடும்பத்தில்
நங்கூரமாய் நான்;
ஒளிக்கொடுப்பேன் என்று
இருளிலும் உழைப்பைத் தேடி;
ஒடி விடும் தந்தை!

வண்ணக் கனவுகளுடன்
வந்து இறங்கிய இடம் கல்லூரி;
தந்தையின் உழைத்தக் காசுக்கு
நாடகமிட்டு நடனமிடும்
என் பணம் நண்பர்களிடத்தில்!

இல்லாதத் தேர்வுகளால்;
பை நிறையும்;
பணம் வந்துக் குவியும்!
வியர்வையை விதையிட்ட
நீங்கள் கணக்குக் கேட்க;
கண் சிவக்கும் எனக்கு;
கண் கலங்கும் உங்களுக்கு!

பொய்யானக் கோபத்தால்
பொடி நடையிட - என்
தோள் பிடித்துத்
தோல் உரித்துக் காட்டும்
உங்கள் அன்பிற்குச்
செல்லமாய் சிணுங்கி;
கள்ளனாய் கரைவேன்!

விளங்காத விபரங்கள் – இன்று
விளங்கிக்கொண்டேன்;
கண் கலங்கி நின்றேன்;
உழைத்தப் பணத்தின்
உயர்வை உணர்ந்துக்கொண்டேன்!

எண்ணி எண்ணிச்
செலவிடும் எனக்குள்
எட்டிப்பார்க்கும் சிக்கனம்;
புரிந்துக்கொண்டேன்
உங்களின் கரிசனம்!

1 comment:

 1. ஃஃஃஃஃ என்
  தோள் பிடித்துத்
  தோல் உரித்துக் காட்டும்
  உங்கள் அன்பிற்குச்
  செல்லமாய் சிணுங்கி;
  கள்ளனாய் கரைவேன்ஃஃஃஃ

  அருமையாக இருக்கிறது...

  ReplyDelete