வாழையடி வாழையாக..மனம் முழுக்க நீ
வியாபித்ததால்;
மனதிற்கு வியாதி!
உன்னைப் பிடித்த வியாதி!

சேர்க்க முடியாமல்
தோற்றுப்போய்
சோர்ந்துப்போனேன்
பணத்தையும் உன்னையும்!

சொந்தமாய் செழிக்காது;
எதுவும் பாலையில்;
ஆனால்;
வாழையடி வாழையாக
நான் மட்டும் இங்கே!

ரணம் கொடுக்கும்
நினைவுகளும்;
மனம் உடைந்து நான்
பாலையிலும்!

வர்ணிக்க முடியாது
வார்த்தைகளால்;
அதனால்;
வடித்துவிடுகிறேன்
கண்ணீரைக் கடிதத்தில்!

அழிந்த எழுத்துக்கள்
தெளிவாய் காட்டும்;
வெற்று இடத்தில்
சிந்தியக் கண்ணீரில்
தடம் தெரியாது;
சோகம் புரியாது!


மனம் முழுக்க நீ
வியாபித்ததால்;
மனதிற்கு வியாதி!
உன்னைப் பிடித்த வியாதி!

சேர்க்க முடியாமல்
தோற்றுப்போய்
சோர்ந்துப்போனேன்
பணத்தையும் உன்னையும்!

சொந்தமாய் செழிக்காது;
எதுவும் பாலையில்;
ஆனால்;
வாழையடி வாழையாக
நான் மட்டும் இங்கே!

ரணம் கொடுக்கும்
நினைவுகளும்;
மனம் உடைந்து நான்
பாலையிலும்!

வர்ணிக்க முடியாது
வார்த்தைகளால்;
அதனால்;
வடித்துவிடுகிறேன்
கண்ணீரைக் கடிதத்தில்!

அழிந்த எழுத்துக்கள்
தெளிவாய் காட்டும்;
வெற்று இடத்தில்
சிந்தியக் கண்ணீரில்
தடம் தெரியாது;
சோகம் புரியாது!

No comments:

Post a Comment