வாழ்த்துக்கள்..


கட்டுப்பட்ட இறைக்குக்
காட்டத் துணிந்தத் தியாகம்;
மறக்காது மனிதக்குலம்;
இருக்கும்வரை உலகம்!

வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
பெருநாள்;
களிப்புடன் பலியிட்டுக்
கண்டுக்கொள்ள இத்திருநாள்!

அறுக்கும் கறி ஏதும்
அடைவதில்லை
இறைவனை;
புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் ஈமானை!

புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!

கசந்துப்போன நினைவுகளை
கசக்கிவிடு;
முட்டி நின்றச் சகோதரனை
முத்தமிடு;
எரியும் வெறுப்புகளை
அணைத்துவிட;
அணைத்துவிடு!

கட்டுப்பட்ட இறைக்குக்
காட்டத் துணிந்தத் தியாகம்;
மறக்காது மனிதக்குலம்;
இருக்கும்வரை உலகம்!

வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
பெருநாள்;
களிப்புடன் பலியிட்டுக்
கண்டுக்கொள்ள இத்திருநாள்!

அறுக்கும் கறி ஏதும்
அடைவதில்லை
இறைவனை;
புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் ஈமானை!

புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!

கசந்துப்போன நினைவுகளை
கசக்கிவிடு;
முட்டி நின்றச் சகோதரனை
முத்தமிடு;
எரியும் வெறுப்புகளை
அணைத்துவிட;
அணைத்துவிடு!

1 comment:

  1. அருமையான வாழ்த்துக் கவிதை! உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete