தனிமைக்குத் தீனி..கண் ஒளிச்சூழ
இதயம் இருள் சூழ
சொட்டும் வியர்வை
சொட்டு மருந்தாய்
குடும்பத்திற்கு!

உன் நிழற்படங்கள்
நிழலாய் என்னோடு;
பசியெடுக்கும் தனிமைக்குத்
தீனியாய் உன் நினைவுகள்!
 
கடல்  கடந்து
மடல் வரைவாய் என்
மனம் குளிர;
வரிகள் வலிக்கொடுப்பதால்
விழிகள் வழிக்கொடுக்கும!

இனம் புரியாத அழுத்தம்
இதயத்திற்கு முத்தமிட;
உன் கடிதம்
கண்ணீரில் கரையும்
என்னைப் போல!

சிரித்துப் பேசும்
சில நிமிடங்கள்
கைப்பேசியில் உன்னோடு!

உதடுகள் ஊனமாகி
இதயம் மவுனமாகி
என் கன்னத்தைத் தொடும்
கண்ணீர்த்துளிகள்;
மரணமாகி மண்ணைக் கவ்வும்!


கண் ஒளிச்சூழ
இதயம் இருள் சூழ
சொட்டும் வியர்வை
சொட்டு மருந்தாய்
குடும்பத்திற்கு!

உன் நிழற்படங்கள்
நிழலாய் என்னோடு;
பசியெடுக்கும் தனிமைக்குத்
தீனியாய் உன் நினைவுகள்!
 
கடல்  கடந்து
மடல் வரைவாய் என்
மனம் குளிர;
வரிகள் வலிக்கொடுப்பதால்
விழிகள் வழிக்கொடுக்கும!

இனம் புரியாத அழுத்தம்
இதயத்திற்கு முத்தமிட;
உன் கடிதம்
கண்ணீரில் கரையும்
என்னைப் போல!

சிரித்துப் பேசும்
சில நிமிடங்கள்
கைப்பேசியில் உன்னோடு!

உதடுகள் ஊனமாகி
இதயம் மவுனமாகி
என் கன்னத்தைத் தொடும்
கண்ணீர்த்துளிகள்;
மரணமாகி மண்ணைக் கவ்வும்!

No comments:

Post a Comment