அகதிகள் முகாம்...


கூடுவிட்டுக்
கூடுப் பாய்ந்த நாங்கள்
இன்றுக்
கூண்டுக்கிளியாய்;
ஒரு கூடாரத்திற்குள்!

கொடுக்கும் உணவை
உண்ண முடியாது;
உண்டாலும் பசித் தீராது;
எண்ணைப் படா சிகையும்;
எண்ணிலடங்கா நோயும்;
சொத்துக்கள் இழந்து;
சோகத்திற்குச் சொந்தமாய்;
ஏக்கத்திற்குப் பந்தமாய்!

கண் முன்னே
கட்டிய வீடுத் தரையில் வீழ;
கண்களில் அப்பிக்கொண்ட
வெறுமை;
யாருக்கும் வேண்டாம் இந்தக்
கொடுமை!

பிள்ளைக்கு பால் இல்லாமல்;
பித்துப் பிடித்து – எங்கள்
சத்துக்கள் தீரும் வரைக்
கத்தினாலும் எட்டாது;
உலகத்தின் கதவைத் தட்டினாலும்
திறக்காது!

எங்கள் சிவந்த மூக்கும்;
அழுதக் கண்களும்;
ஒட்டிய வயிறும்;
கட்டியத் தொண்டையும்;
தோற்றமாய் எங்கள் தோரணை;
மாறுமா எங்கள் வேதனை!

கூடுவிட்டுக்
கூடுப் பாய்ந்த நாங்கள்
இன்றுக்
கூண்டுக்கிளியாய்;
ஒரு கூடாரத்திற்குள்!

கொடுக்கும் உணவை
உண்ண முடியாது;
உண்டாலும் பசித் தீராது;
எண்ணைப் படா சிகையும்;
எண்ணிலடங்கா நோயும்;
சொத்துக்கள் இழந்து;
சோகத்திற்குச் சொந்தமாய்;
ஏக்கத்திற்குப் பந்தமாய்!

கண் முன்னே
கட்டிய வீடுத் தரையில் வீழ;
கண்களில் அப்பிக்கொண்ட
வெறுமை;
யாருக்கும் வேண்டாம் இந்தக்
கொடுமை!

பிள்ளைக்கு பால் இல்லாமல்;
பித்துப் பிடித்து – எங்கள்
சத்துக்கள் தீரும் வரைக்
கத்தினாலும் எட்டாது;
உலகத்தின் கதவைத் தட்டினாலும்
திறக்காது!

எங்கள் சிவந்த மூக்கும்;
அழுதக் கண்களும்;
ஒட்டிய வயிறும்;
கட்டியத் தொண்டையும்;
தோற்றமாய் எங்கள் தோரணை;
மாறுமா எங்கள் வேதனை!

No comments:

Post a Comment