கேட்காத ஓலம்..ஈரம் வற்றிப்போன
உலகத்தின் ஒரத்தில்
எங்கள் நாடு!

அழுகையும் அலறலும்
பழகிப்போனப்
பாலஸ்தீனியர்கள்
நாங்கள்!

வெடிச்சத்தம் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள்
செவிகளில்!

விடிந்தாலும் பயம்
தொற்றும்;
விடியல் மறைந்தாலும்
பயம் தொற்றும்!

ஒடுவதற்கே எங்களுக்கு
நேரம் சரியாக இருப்பதால்;
சரியான நேரம்
எங்களுக்கு இன்னும்
கிட்டாமல்!

என் வீட்டைப் பறித்து
என்னை அகதி என்றான்;
குரல் எழுப்பினால்
எதிரி என்றான்;
கரம் உயர்த்தினால்
தீவிரவாதி என்றான்!

பல ஆண்டுகளாக
நாங்கள் கதறுவதால்;
பழகிவிட்டன தரணிக்கு!


ஈரம் வற்றிப்போன
உலகத்தின் ஒரத்தில்
எங்கள் நாடு!

அழுகையும் அலறலும்
பழகிப்போனப்
பாலஸ்தீனியர்கள்
நாங்கள்!

வெடிச்சத்தம் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள்
செவிகளில்!

விடிந்தாலும் பயம்
தொற்றும்;
விடியல் மறைந்தாலும்
பயம் தொற்றும்!

ஒடுவதற்கே எங்களுக்கு
நேரம் சரியாக இருப்பதால்;
சரியான நேரம்
எங்களுக்கு இன்னும்
கிட்டாமல்!

என் வீட்டைப் பறித்து
என்னை அகதி என்றான்;
குரல் எழுப்பினால்
எதிரி என்றான்;
கரம் உயர்த்தினால்
தீவிரவாதி என்றான்!

பல ஆண்டுகளாக
நாங்கள் கதறுவதால்;
பழகிவிட்டன தரணிக்கு!

No comments:

Post a Comment