இறந்துவிட்ட ஆசை...


நித்தமும் அலைவீசும்;
ஓடி வேலைச் செய்ய
ஓருவருமில்லை
உதவியாக என் வீட்டில்!

அவசரத்திற்கு அவசியமான
இல்லாத ஆண் துணையால்;
வலியெடுத்துத் துடிதுடித்தாலும்;
அழுதுக்கொண்டே அடுத்தவரை
தேடும் நிராயுதபாணியாக
என் குடும்பம்!

கறி வாங்கவும்;
காய் வாங்கவும்;
வாசலில் தவம் இருந்து;
ஆள் தேடி;
அலைப்பாயும் அன்னை!

திருடன் வந்தாலும்;
விளக்கை அணைத்து;
சப்தமிடப் பயந்து;
தொலைப்பேசியில்
உதவித் தேடி;
துடிப்பை அதிகமாக்கி;
அயர்ந்துவிடும் இதயம்!

ஆனது என்ன;
என்று எண்ணி எண்ணி;
குழம்பிய மூளைக்கு;
ஆறுதல் சொல்லி
அலுத்துப்போன மனம்!

சூடான மூச்சிக்காற்றைக்
கக்கிவிட்டு;
மெதுவாய் தொடங்கினேன்;
வந்துவிடுகிறேனே அம்மா!

உன் மெளனத்தால்
மரணித்துப்போன என்;
உதடுகள்!

வெறுத்துப்போனத் தனிமையால்
கறுத்துப்போன நினைவுகளால்;
முடிச்சிகளை மூட்டைக்கட்டி;
முடித்துவிட உதித்த எண்ணங்கள்
மலடாய்போய் மடிந்துவிட்டது!
இந்த முறையும் என்
ஆசை இறந்துவிட்டது!

நித்தமும் அலைவீசும்;
ஓடி வேலைச் செய்ய
ஓருவருமில்லை
உதவியாக என் வீட்டில்!

அவசரத்திற்கு அவசியமான
இல்லாத ஆண் துணையால்;
வலியெடுத்துத் துடிதுடித்தாலும்;
அழுதுக்கொண்டே அடுத்தவரை
தேடும் நிராயுதபாணியாக
என் குடும்பம்!

கறி வாங்கவும்;
காய் வாங்கவும்;
வாசலில் தவம் இருந்து;
ஆள் தேடி;
அலைப்பாயும் அன்னை!

திருடன் வந்தாலும்;
விளக்கை அணைத்து;
சப்தமிடப் பயந்து;
தொலைப்பேசியில்
உதவித் தேடி;
துடிப்பை அதிகமாக்கி;
அயர்ந்துவிடும் இதயம்!

ஆனது என்ன;
என்று எண்ணி எண்ணி;
குழம்பிய மூளைக்கு;
ஆறுதல் சொல்லி
அலுத்துப்போன மனம்!

சூடான மூச்சிக்காற்றைக்
கக்கிவிட்டு;
மெதுவாய் தொடங்கினேன்;
வந்துவிடுகிறேனே அம்மா!

உன் மெளனத்தால்
மரணித்துப்போன என்;
உதடுகள்!

வெறுத்துப்போனத் தனிமையால்
கறுத்துப்போன நினைவுகளால்;
முடிச்சிகளை மூட்டைக்கட்டி;
முடித்துவிட உதித்த எண்ணங்கள்
மலடாய்போய் மடிந்துவிட்டது!
இந்த முறையும் என்
ஆசை இறந்துவிட்டது!

1 comment:

  1. இஸ்லாம் இறந்துவிட ஆசைப் படுவதனை ஆதரிக்கவில்லை .அதிக நாள் வாழ்ந்து இறைவனின் அருளை அடைய வேண்டும்

    ReplyDelete