சராசரி இந்தியக் குடிமகன்..


ஏழ்மைக்கு வாக்கப்பட்டு;
வறுமைக்குத் தோள்கொடுத்துத் 
துவண்டுப் போய்; 
வாக்காளனாக மட்டுமே;
வளரும் இந்தியாவின்
வாரிசுகள் நாங்கள்!

கட்டுக் கட்டாய்
பணத்தோடுக்
குளியல் போடும்;
களவாணிகள்
எங்கள் அரசியல்வாதிகள்!

சிரிப்பு ரேகைகள்
எங்கள் முகத்தில் தெரிய;
அடிக்கடி வரும்
தேர்தல்கள்!

ஓட்டுக்கு மட்டும்
கைகூப்பி;
முகம் திறந்தக்
கொள்ளையர்கள்!

விரலுக்கு மைப்பூசி;
முகத்தில் கரிப்
பூசியதிற்குப் பிறகு;
மறந்துப் போகும்
எங்களின் நினைவுகள்!
 
ஓட்டெடுப்பிற்கு மட்டும்
பயன்படும் இன்னொரு
இயந்திரம் - சராசரி
இந்தியக் குடிமகன்!

ஏழ்மைக்கு வாக்கப்பட்டு;
வறுமைக்குத் தோள்கொடுத்துத் 
துவண்டுப் போய்; 
வாக்காளனாக மட்டுமே;
வளரும் இந்தியாவின்
வாரிசுகள் நாங்கள்!

கட்டுக் கட்டாய்
பணத்தோடுக்
குளியல் போடும்;
களவாணிகள்
எங்கள் அரசியல்வாதிகள்!

சிரிப்பு ரேகைகள்
எங்கள் முகத்தில் தெரிய;
அடிக்கடி வரும்
தேர்தல்கள்!

ஓட்டுக்கு மட்டும்
கைகூப்பி;
முகம் திறந்தக்
கொள்ளையர்கள்!

விரலுக்கு மைப்பூசி;
முகத்தில் கரிப்
பூசியதிற்குப் பிறகு;
மறந்துப் போகும்
எங்களின் நினைவுகள்!
 
ஓட்டெடுப்பிற்கு மட்டும்
பயன்படும் இன்னொரு
இயந்திரம் - சராசரி
இந்தியக் குடிமகன்!

No comments:

Post a Comment