ஜொலிக்கும் என்னால்
ஒளிரும் முகம்;
விலைப்பேசி என்னை
விரட்டிக் கொண்டு;
கூட்டத்தில் ஓடும்
பந்தயக் குதிரையாக!
ஏங்கி நிற்கும்
ஏழைக்கு
தூரமாய்;
பதுக்கல்
பணக்காரனுக்குப்
பாரமாய்!
நான் ஏறினால்
முகம் இறங்கும்;
தொடக்கம்
"கிராம்" என்றாலும்
கிலோக் கணக்கில்
சுமையாக மங்கைக்கு!
ஏறும் ; இறங்கும்
பொருளாதாரத்திற்கு
இரண்டாம் தாரமாய்!
மங்கும் நான்;
மகளிருக்கு
கதாநாயகனாய்!
அழும் குடும்பத்தை
அணைக்கவும்;
சிரிக்கும் குடும்பத்தைச்
சிதைக்கவும்;
சுருக்கமாய்ச்
சொன்னால்
ஒளிந்திருந்து
உசுப்பேற்றும்
விலை உயர்ந்த
வில்லன்! Tweet
No comments:
Post a Comment