சாலைகளில் அழகுக்;
குழி விழுந்தக் கன்னங்களில்;
குதித்துக் குதித்துச் செல்வேன்;
எல்லோரையும்
குதிக்கவைத்துச் செல்வேன்!
இரும்பிற்கு வயதானதால்
இருமி இருமிச் செல்வேன்;
தடுமாறும் சக்கரத்தினால்
தகரங்களால் தாளமிட்டேக்
கொல்வேன்!
ஒட்டுப் போட்ட உடலால்
கட்டுப்பட்டு ஓடுவேன்;
மழைவந்தால் கட்டவிழ்ந்து
ஒழுகுவேன்!
சப்தம் போட்டே வருவதால்
தேவையில்லை ஒலிப்பான்;
திணறிப்போன என் வயிற்றால்;
படியில் தொங்கிக் கொண்டே நிற்பான்!
ஓட்டை விழுந்தப் பாகத்தால்;
ஜன்னல் எதுவென்றுத் தெரியாது;
என்னை ஓட்டுபவரின்
சாதனை மட்டும் யாருக்கும் புரியாது!
முடியப்போகும்
முதுமையால்;
மயங்கி மயங்கிப் படுப்பேன்;
கரம் கொண்டுப்;
பலம் காட்டும்;
மனிதனைக் கண்டுச் சிரிப்பேன்!
Tweet
No comments:
Post a Comment