முட்டி வெளியே
வருமுன்னே எனை
வெட்டி எறிந்தது ஏன்;
கட்டித்தழுவ வேண்டிய
எனைக் கொன்று;
நீ வென்றுக் காட்டியது ஏன்!
ஒட்டிவந்த
தொப்புள் கொடியுடன்;
நான் அலறி சப்தமிட்டு;
உன் முகம் பிரகாசிக்க
வேண்டாமா!
மூச்சி முட்டி
முதல் சுவாசத்தில்;
உன் நேசம் பெறவேண்டாமா;
தாய் வாசம் சுவாசிக்க வேண்டாமா!
வறுமைக்கு அஞ்சிப்
பிஞ்சி எனைக் கொன்றயோ;
பெண்தானே என
மண் அள்ளிப்போட்டாயோ!
கொல்வதற்கா எனைக்
கொஞ்சக்காலம் சுமந்தாய்;
கருக்கலைப்பு என
உயிரை நீ கொன்றாய்!
கத்தி அலறிக்கொண்டு நான்
வரும் வழியில்;
கத்திக்கு நீ இடம் கொடுத்தாய்;
தாய்மைக்குக் கரைப்பட்டப் பின்னே
சுத்தம் செய்ததாய் சொல்கிறாய்!
Tweet
No comments:
Post a Comment