வீடு வாங்க...சுட்டிக் குழந்தைகள்
முட்டித் தேயாமல்;
வழுக்கி விழ
மெழுகு முலாம்!

வீடே இல்லாளுக்கென்றாலும்
மடி நிரப்பும் ;
உன் கையால் மணம் நிரப்பும்
சமையற்கட்டுத் தான்
உன் அரசாங்கம்! 

ஒடியாடியப் பெற்றோருக்கு
ஒய்வெடுக்கச் சாய்வு
நாற்காலியுடன் தனி அறை!

தூவப்பட்ட ஆசைகளுக்கு
விதையாய் இப்போதுதான்
மனை!

அஸ்திவாரத்திலிருந்துத்
தட்டியெழுப்ப
வீட்டினைக் கட்டியெழுப்ப
வந்திருக்கிறேன்
கடல் கடந்து
கனவு சுமந்து!

விடுதலைக்குக் காத்திருக்கும்
குடும்பங்கள்
வாடகை வீட்டிலிருந்து;
சிறகெடுத்துப் புது வீடுப்புக;
சிறகொடிந்துச் சிறைக்குள்
வளைகுடாவிற்குள் நான்!சுட்டிக் குழந்தைகள்
முட்டித் தேயாமல்;
வழுக்கி விழ
மெழுகு முலாம்!

வீடே இல்லாளுக்கென்றாலும்
மடி நிரப்பும் ;
உன் கையால் மணம் நிரப்பும்
சமையற்கட்டுத் தான்
உன் அரசாங்கம்! 

ஒடியாடியப் பெற்றோருக்கு
ஒய்வெடுக்கச் சாய்வு
நாற்காலியுடன் தனி அறை!

தூவப்பட்ட ஆசைகளுக்கு
விதையாய் இப்போதுதான்
மனை!

அஸ்திவாரத்திலிருந்துத்
தட்டியெழுப்ப
வீட்டினைக் கட்டியெழுப்ப
வந்திருக்கிறேன்
கடல் கடந்து
கனவு சுமந்து!

விடுதலைக்குக் காத்திருக்கும்
குடும்பங்கள்
வாடகை வீட்டிலிருந்து;
சிறகெடுத்துப் புது வீடுப்புக;
சிறகொடிந்துச் சிறைக்குள்
வளைகுடாவிற்குள் நான்!

1 comment:

  1. எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா?
    குடும்பத்தினை மறந்து வாழ்வில் மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம் தேட வேண்டிய நிலமை என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

    http://nidurseasons.blogspot.com/2010/11/blog-post_8712.html

    ReplyDelete