எங்கே நான்


முட்டும் நினைவுகள்
கண்ணீராய் கக்கிக்
கொண்டிருக்க;
சிந்தித்துச் சிந்தித்துச்
சிகை கொஞ்சம் கொஞ்சமாய்
மண்ணிற்குச் சமர்ப்பணமாய்!

விடியும் இரவுகள் தினமும்;
விடியா இருளாய்
சூழ்ந்திருக்கும்;
தாகித்திருக்கும் மனதிற்கு
ஏக்கமாய் தூக்கம் மறந்து
நாட்களை எண்ணி எண்ணி
அலுத்துப்போன விழிகளுக்கு
வலி மட்டும் மிச்சமாய்!

சோகங்கள்
தனிமைக்குத் தீனியாய்;
ஆணியைக் கொண்டு
அறைந்த சுவராய்;
புதிருக்குப் புரியாமல்;
புரிந்தவருக்கு விளங்காமல் நான்!

பாஷையைக் கொண்டு
ஓசை ஒளிவட்டமிடக் காதோரம்;
விழிகள் இரண்டும்
நீரில் நீந்திச் செல்லும்!
உறவுகளைச் சொல்லிச் செல்லும்!

முட்டும் நினைவுகள்
கண்ணீராய் கக்கிக்
கொண்டிருக்க;
சிந்தித்துச் சிந்தித்துச்
சிகை கொஞ்சம் கொஞ்சமாய்
மண்ணிற்குச் சமர்ப்பணமாய்!

விடியும் இரவுகள் தினமும்;
விடியா இருளாய்
சூழ்ந்திருக்கும்;
தாகித்திருக்கும் மனதிற்கு
ஏக்கமாய் தூக்கம் மறந்து
நாட்களை எண்ணி எண்ணி
அலுத்துப்போன விழிகளுக்கு
வலி மட்டும் மிச்சமாய்!

சோகங்கள்
தனிமைக்குத் தீனியாய்;
ஆணியைக் கொண்டு
அறைந்த சுவராய்;
புதிருக்குப் புரியாமல்;
புரிந்தவருக்கு விளங்காமல் நான்!

பாஷையைக் கொண்டு
ஓசை ஒளிவட்டமிடக் காதோரம்;
விழிகள் இரண்டும்
நீரில் நீந்திச் செல்லும்!
உறவுகளைச் சொல்லிச் செல்லும்!

No comments:

Post a Comment