வளைந்தக் கால்களும்
அழகாய் இருக்க;
கட்டிப் பிடித்துக்;
கடித்துச் செல்ல;
நோய் கொடுக்கும்
ஊசி முனை!
குருதி எடுக்கக்
கூட்டமாய் வருவேன்;
குடைந்துவிட்டு;
கும்மாளம் அடிப்பேன்!
சுத்தம் இல்லா இடத்தைச்
சுற்றிச் சுற்றி வருவேன்;
சுற்றி நிற்கும் மனிதர்களைச்
சுருக்கென்று செல்லமாய்;
முத்தமிட்டுச் செல்வேன்!
இரத்தம் சூடேறேக்
காதோடு ரீங்காரம்
இடுவேன்;
கடுப்பு வந்துக் கரம்
தூக்கும் போது;
கடித்துவிட்டுச்
சிரித்துவிட்டுச் செல்வேன்!
வலை எனக்கென்றுச்
சொல்லி;
அவர்களே வலையில்
ஒளிவார்;
மணக்கும் மருந்தைக்
கொடுத்து மயக்கம்
தரவே நினைப்பார்!
எதைக் கொடுத்தாலும்
எனைத் தடுக்க முடியாது;
சுற்றுச் சூழல்
சரியில்லை என்றால்
எனை வெல்ல முடியாது! Tweet
No comments:
Post a Comment