உன் பயணம்..


உன் விடுமுறை
விளிம்பில் நிற்க;
மணம் வீசிய என் உள்ளம்
மலடானது!

அழுது வீங்கும்
கண்களும்;
ஒடிந்து ஒய்வெடுக்கும்
மனமும்;
கதறி கதறித் தேடும்;
நீயில்லாமல் வாடும்!

வாசம் வீசும்
தலையணையை;
வாரி அணைத்து அழுவேன்;
தாங்க முடியாப் பாதமும்
கட்டிலில் என்னைத் தள்ளும்!
 
உன் வாசம் வீசும்
திரவியங்கள்;
அறையினில் மூச்சு
முட்டச் செய்யும்;
கண்ணீர் துளிகள்
கன்னத்தைத்
தொட்டுச் செல்லும்!

துவைக்க மனமில்லாமல்
தொங்கும் சட்டையக் கண்டு
ஏங்குவேன்;
முகர்ந்துப் பார்த்தப் பின்தான்
நான் தூங்குவேன்!

தேவை வந்தாலும்
தேடாது என் விழி;
பத்திரமாய் என்னிடம்;
இறுதியாக நீ தந்தப் பணம்!

உன் விடுமுறை
விளிம்பில் நிற்க;
மணம் வீசிய என் உள்ளம்
மலடானது!

அழுது வீங்கும்
கண்களும்;
ஒடிந்து ஒய்வெடுக்கும்
மனமும்;
கதறி கதறித் தேடும்;
நீயில்லாமல் வாடும்!

வாசம் வீசும்
தலையணையை;
வாரி அணைத்து அழுவேன்;
தாங்க முடியாப் பாதமும்
கட்டிலில் என்னைத் தள்ளும்!
 
உன் வாசம் வீசும்
திரவியங்கள்;
அறையினில் மூச்சு
முட்டச் செய்யும்;
கண்ணீர் துளிகள்
கன்னத்தைத்
தொட்டுச் செல்லும்!

துவைக்க மனமில்லாமல்
தொங்கும் சட்டையக் கண்டு
ஏங்குவேன்;
முகர்ந்துப் பார்த்தப் பின்தான்
நான் தூங்குவேன்!

தேவை வந்தாலும்
தேடாது என் விழி;
பத்திரமாய் என்னிடம்;
இறுதியாக நீ தந்தப் பணம்!

No comments:

Post a Comment