உன் கடிதம்...
வெள்ளி விடுமுறைக்கு
ஏங்குவேன் பள்ளிக் குழந்தையாக;
கிடைத்ததும் - பாரம் ஏற்ற;
தூரமாய் இருக்கும்
உன் கடிதம்தான்!

உன் மடல் கண்டு என்
முகம் மலறும் - உன்
விரல் கொண்ட எழுத்திற்கு
என் குரல் உடைந்து;
மனம் குமுறும்!

விழுந்து விழுந்துப்
படித்ததால் அடி
மனதிற்கு;
வலி என் விழிகளுக்கு!

உதிர்ந்தக் கண்ணீரால்
நனைந்த உன் வரிகள்;
மலடு ஆனப் பேச்சால்
கிழடு ஆகும் என் குரல்!

கெட்டியாகப் பிடித்துக்
கட்டியழுவேன்;
முட்டும் கண்ணீருக்கு
முதல் உதவி உன்
குரல் மட்டும்!வெள்ளி விடுமுறைக்கு
ஏங்குவேன் பள்ளிக் குழந்தையாக;
கிடைத்ததும் - பாரம் ஏற்ற;
தூரமாய் இருக்கும்
உன் கடிதம்தான்!

உன் மடல் கண்டு என்
முகம் மலறும் - உன்
விரல் கொண்ட எழுத்திற்கு
என் குரல் உடைந்து;
மனம் குமுறும்!

விழுந்து விழுந்துப்
படித்ததால் அடி
மனதிற்கு;
வலி என் விழிகளுக்கு!

உதிர்ந்தக் கண்ணீரால்
நனைந்த உன் வரிகள்;
மலடு ஆனப் பேச்சால்
கிழடு ஆகும் என் குரல்!

கெட்டியாகப் பிடித்துக்
கட்டியழுவேன்;
முட்டும் கண்ணீருக்கு
முதல் உதவி உன்
குரல் மட்டும்!

No comments:

Post a Comment