உள்ளே வா..


மோகம் கொண்ட
உலகத்திற்குத்;
தாகம் தீர்க்கும் சாதனம்;
உயிர்கொண்டு;சதைப்போர்த்திய  
உனக்கு மட்டும் ஏன்
இந்த நூதனம்!

தேவைக்கு மட்டும்;
பாவை நீ என்னப்
போதைப்பொருளா;
கண்டு ரசிக்கும்
கண்களுக்கு நீ என்னக்
காட்சிப்பொருளா!

உரிமைக் கேட்டு
குரல் கொடுக்க
நீ என்று அடைப்பட்டாய்;
கேட்டுக் கேட்டே;
சொல்லாமல் சொல்லிக்
கூண்டில் அடைப்பட்டாய்!

அடக்க நினைக்கும்
ஆதிக்கத்திற்கு;
சாட்டையடி உண்டு;
சன்மார்க்கம்
என்பதைக் கொண்டு!

கிள்ளிக் கொடுக்கும்
மனதிற்கு முன்னே;
அள்ளிக்கொடுக்கும் உரிமை;
அள்ளக் அள்ளக் குறையாது
அதன் மகிமை!

காமம் கொண்டக்
கயவருக்கு மத்தியில்;
தாய்மையைப் பற்றி
உரைக்கும் - உன் பெருமை
எட்டுத் திக்கும் ஒலிக்கும்!
 
மூடாத வாசல்
முத்தமிட்டு அழைக்கிறது;
முதல் அடி எடுத்து
வைத்து வா;
இறுகிப்போன இதயமும்
இளகிப்போய் இனிக்கிறது;
உள்ளே வந்துப் பார்!

மோகம் கொண்ட
உலகத்திற்குத்;
தாகம் தீர்க்கும் சாதனம்;
உயிர்கொண்டு;சதைப்போர்த்திய  
உனக்கு மட்டும் ஏன்
இந்த நூதனம்!

தேவைக்கு மட்டும்;
பாவை நீ என்னப்
போதைப்பொருளா;
கண்டு ரசிக்கும்
கண்களுக்கு நீ என்னக்
காட்சிப்பொருளா!

உரிமைக் கேட்டு
குரல் கொடுக்க
நீ என்று அடைப்பட்டாய்;
கேட்டுக் கேட்டே;
சொல்லாமல் சொல்லிக்
கூண்டில் அடைப்பட்டாய்!

அடக்க நினைக்கும்
ஆதிக்கத்திற்கு;
சாட்டையடி உண்டு;
சன்மார்க்கம்
என்பதைக் கொண்டு!

கிள்ளிக் கொடுக்கும்
மனதிற்கு முன்னே;
அள்ளிக்கொடுக்கும் உரிமை;
அள்ளக் அள்ளக் குறையாது
அதன் மகிமை!

காமம் கொண்டக்
கயவருக்கு மத்தியில்;
தாய்மையைப் பற்றி
உரைக்கும் - உன் பெருமை
எட்டுத் திக்கும் ஒலிக்கும்!
 
மூடாத வாசல்
முத்தமிட்டு அழைக்கிறது;
முதல் அடி எடுத்து
வைத்து வா;
இறுகிப்போன இதயமும்
இளகிப்போய் இனிக்கிறது;
உள்ளே வந்துப் பார்!

No comments:

Post a Comment