மது மயக்கம்..


தள்ளாடும் மனிதன்
கொண்டாடும் போதை;
தடுமாறும் பாதங்களால்
சேரமுடியா பாதை!

மதுக் கொண்ட மயக்கத்தால்;
மகள் கூட மணக்கும்;
வெறியேறிப் போனால்
தயங்கமாட்டாய் கொலைக்கும்!

தடுக்க வேண்டிய அரசோ;
கடை வைத்துக் கொடுக்கும்;
ஒழிக்க வேண்டியதைத் தவிர்த்து
ஊற்றிக் கொடுக்கச் சொல்லும்!

குடித்துவிட்ட மதுவால்;
ஆடை விலகி நிற்கும்;
துர்நாற்றம் எடுக்கும் வாயினால்
உறவுகளே விலக்கி வைக்கும்!

குடித்துவிட்டுப் புலம்புவது
எல்லாம் நிம்மதியா;
உயிரோடு உனக்கு நீயேக்
கட்டிக்கொள்ளும் சமாதியா!

தள்ளாடும் மனிதன்
கொண்டாடும் போதை;
தடுமாறும் பாதங்களால்
சேரமுடியா பாதை!

மதுக் கொண்ட மயக்கத்தால்;
மகள் கூட மணக்கும்;
வெறியேறிப் போனால்
தயங்கமாட்டாய் கொலைக்கும்!

தடுக்க வேண்டிய அரசோ;
கடை வைத்துக் கொடுக்கும்;
ஒழிக்க வேண்டியதைத் தவிர்த்து
ஊற்றிக் கொடுக்கச் சொல்லும்!

குடித்துவிட்ட மதுவால்;
ஆடை விலகி நிற்கும்;
துர்நாற்றம் எடுக்கும் வாயினால்
உறவுகளே விலக்கி வைக்கும்!

குடித்துவிட்டுப் புலம்புவது
எல்லாம் நிம்மதியா;
உயிரோடு உனக்கு நீயேக்
கட்டிக்கொள்ளும் சமாதியா!

No comments:

Post a Comment