பள்ளிப் பயில்வான்கள்


தளும்பும் புத்தகத்தால்
தள்ளாடும் நடை;
உண்மையானக்
குடிமகன்!

வருங்காலச் சுமைக்கு
ஒத்திகை;
கனமானத் திட்டத்தால்
நிறைவானது எங்கள் பை!

பால் சோறு
ஊட்டிவிட அம்மாவைத் தேடும்;
பாழாய்ப் போன
புத்தகத்தைத் தூக்க 
சிறு பயில்வானாய் நான்!

இறக்கி வைத்தப்
புத்தகத்தைப்
பள்ளியில் இருந்து
மனம் ஏற்றிக்கொள்ள
நினைக்கும் போதே;
பொதிச் சுமக்கும்
கழுதை பரவாயில்லை!

எதிர்காலத்
தலைவர்கள் நாங்கள்
மூட்டைத் தூக்கியாக;
கல்வியோடுச் சேர்த்துக்
கைத்தொழிலையும்
கற்றுக்கொண்டு !

தளும்பும் புத்தகத்தால்
தள்ளாடும் நடை;
உண்மையானக்
குடிமகன்!

வருங்காலச் சுமைக்கு
ஒத்திகை;
கனமானத் திட்டத்தால்
நிறைவானது எங்கள் பை!

பால் சோறு
ஊட்டிவிட அம்மாவைத் தேடும்;
பாழாய்ப் போன
புத்தகத்தைத் தூக்க 
சிறு பயில்வானாய் நான்!

இறக்கி வைத்தப்
புத்தகத்தைப்
பள்ளியில் இருந்து
மனம் ஏற்றிக்கொள்ள
நினைக்கும் போதே;
பொதிச் சுமக்கும்
கழுதை பரவாயில்லை!

எதிர்காலத்
தலைவர்கள் நாங்கள்
மூட்டைத் தூக்கியாக;
கல்வியோடுச் சேர்த்துக்
கைத்தொழிலையும்
கற்றுக்கொண்டு !

1 comment: