கோபம்..



கண்கள் சிவக்க;
செவிகள் சூடேற;
நரம்புகள் புடைக்கச்;
சூடான இரத்தம்
சுகமாய் உடம்பினுள்!

தடுமாறும் தமனியால்
இடம் மாறும் – என்
குணம் மாறும்!

சுழலும் நாவிற்குச்;
சுருங்கிப் போகும் மனம்;
கருகும் முகமோ;
உறவினரையும் ஒரு
அடி தள்ளி நிற்கச் செய்யும்!

மலறும் என் முகம்;
மிரளும் மனிதனைக் கண்டு;
நான்தான் வீரன் என்று!

முற்றிப்போனக் 
கோபத்தால்
விக்கித்துப்போகும் 
இதயம்!

சூடான இரத்தங்கள்
வேலை நிறுத்தம் செய்ய;
துடிக்க வேண்டிய இதயமோ
நடித்துப்போனதால் துடித்துப்போனேன்;
உலகத்தைத் துண்டித்துப்போனேன்!



கண்கள் சிவக்க;
செவிகள் சூடேற;
நரம்புகள் புடைக்கச்;
சூடான இரத்தம்
சுகமாய் உடம்பினுள்!

தடுமாறும் தமனியால்
இடம் மாறும் – என்
குணம் மாறும்!

சுழலும் நாவிற்குச்;
சுருங்கிப் போகும் மனம்;
கருகும் முகமோ;
உறவினரையும் ஒரு
அடி தள்ளி நிற்கச் செய்யும்!

மலறும் என் முகம்;
மிரளும் மனிதனைக் கண்டு;
நான்தான் வீரன் என்று!

முற்றிப்போனக் 
கோபத்தால்
விக்கித்துப்போகும் 
இதயம்!

சூடான இரத்தங்கள்
வேலை நிறுத்தம் செய்ய;
துடிக்க வேண்டிய இதயமோ
நடித்துப்போனதால் துடித்துப்போனேன்;
உலகத்தைத் துண்டித்துப்போனேன்!

2 comments:

  1. அருமை அருமை.

    கோபத்தின் வெளிபாடுகள்
    கொப்பளிக்கிறது கொதித்து..

    ReplyDelete
  2. கோபம்

    மனிதனின் வரமா? சாபமா?

    ReplyDelete