பழக்கப்பட்ட நான்..



நினைத்துப் பார்க்கவேத்
தூரமாய்;
நீயும் நானும் பெருநாளுக்குச்
சேர்ந்து இருந்த நாட்கள்!

ஒரு நாளும் இனிக்காது;
புத்தம் புது ஆடைகள்
நான் வாங்கும் போது;
எனக்கு வாங்கும் போது!

மலர்ந்துப் போன
விழிகளால்;
ஒதுங்கிப் போகும் என்
உதடுகள்;
புன்னைகையைக் கொண்டு;
நீ எனக்கு அனுப்பிய
ஆடையைக் கண்டு!

வருடந்தோறும்
பெருநாள் பரிசு
முத்தம் மட்டுமே நம்
குழந்தைக்கு!

அலுத்துப்போன அவனோ
ஆடு அறுப்பதைக் காணப் போவான்;
தொலைப்பேசியில் இருந்து
காணாமல் போவான்!

பழக்கப்பட்ட நானோ
சிரித்துக்கொள்வேன்;
கொடுத்த வைத்த ஆட்டை
நினைத்துக்கொள்வேன்!


நினைத்துப் பார்க்கவேத்
தூரமாய்;
நீயும் நானும் பெருநாளுக்குச்
சேர்ந்து இருந்த நாட்கள்!

ஒரு நாளும் இனிக்காது;
புத்தம் புது ஆடைகள்
நான் வாங்கும் போது;
எனக்கு வாங்கும் போது!

மலர்ந்துப் போன
விழிகளால்;
ஒதுங்கிப் போகும் என்
உதடுகள்;
புன்னைகையைக் கொண்டு;
நீ எனக்கு அனுப்பிய
ஆடையைக் கண்டு!

வருடந்தோறும்
பெருநாள் பரிசு
முத்தம் மட்டுமே நம்
குழந்தைக்கு!

அலுத்துப்போன அவனோ
ஆடு அறுப்பதைக் காணப் போவான்;
தொலைப்பேசியில் இருந்து
காணாமல் போவான்!

பழக்கப்பட்ட நானோ
சிரித்துக்கொள்வேன்;
கொடுத்த வைத்த ஆட்டை
நினைத்துக்கொள்வேன்!

2 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

    ReplyDelete
  2. ஃஃஃஃஃஅலுத்துப்போன அவனோ
    ஆடு அறுப்பதைக் காணப் போவான்;ஃஃஃஃ
    அருமையாக வரைந்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete