கண்மூடுவேன்..


கண்மூடும் நேரத்திலும்
கண்ணாமூச்சியாடும்;
காதோடு ஏதோக்
கரவொலிக் கேட்க;
கண்விழித்தால்
கண்ணீர் மட்டும்தான் மிச்சம்!

கக்கிக் கொண்டிருக்கும்
என் மேனி;
சுடும் காய்ச்சலாய்!

மறைத்துக் கொண்டு
உன்னோடு சிரித்துக்
கொண்டிருப்பேன்;
என் சூட்டை நீ
தாங்கமாட்டாய் என்பதால்!

ஒளிந்திருக்கும்
இருமல் என்னைக்
காட்டிக்கொடுக்க;
நீயோ கண் கசக்க!

உன் மருத்துவக்
குறிப்பிற்கு
மனம் விட்டுச் சிரிப்பேன்;
மனதிற்குள்ளேச் சிரிப்பேன்!

கொதிக்கும் சூட்டினைத்
தணிக்கும் உன் குரல்;
இனிக்கும் நினைவுகளோடுக்
கண்மூடுவேன்;
கக்கிக் கொண்டிருக்கும் என்
கண்ணீரோடு!

கண்மூடும் நேரத்திலும்
கண்ணாமூச்சியாடும்;
காதோடு ஏதோக்
கரவொலிக் கேட்க;
கண்விழித்தால்
கண்ணீர் மட்டும்தான் மிச்சம்!

கக்கிக் கொண்டிருக்கும்
என் மேனி;
சுடும் காய்ச்சலாய்!

மறைத்துக் கொண்டு
உன்னோடு சிரித்துக்
கொண்டிருப்பேன்;
என் சூட்டை நீ
தாங்கமாட்டாய் என்பதால்!

ஒளிந்திருக்கும்
இருமல் என்னைக்
காட்டிக்கொடுக்க;
நீயோ கண் கசக்க!

உன் மருத்துவக்
குறிப்பிற்கு
மனம் விட்டுச் சிரிப்பேன்;
மனதிற்குள்ளேச் சிரிப்பேன்!

கொதிக்கும் சூட்டினைத்
தணிக்கும் உன் குரல்;
இனிக்கும் நினைவுகளோடுக்
கண்மூடுவேன்;
கக்கிக் கொண்டிருக்கும் என்
கண்ணீரோடு!

1 comment:

  1. ♫ தீபாவளி வாழ்த்துக்கள் ♫

    ReplyDelete