மகள் திருமணம்...


ஓட்டுமொத்தக் உன் கரமும்
ஒளிந்துக்கொள்ளும்
என் விரலில்;
உன் பிஞ்சிக் கால்களைக்;
என் கன்னத்தில் வைத்து;
முத்தமிட்டு அழுவேன்!

செல்லமாய் நீ இருந்ததால்;
என் மார்பு உனக்கு
தலையணையாய்;
தூங்கிய உன்னைத்;
தூக்க மனமில்லாமல்;
தூங்கிப்போவேன் நானும்!

பள்ளித் திரும்பி;
வீடுச் சேர்ந்ததும்;
மூலைக்குப் போகும்;
உன் புத்தகமூட்டை;
உன் மூளைத் தேடும்
என்னை!

பூப்பெய்திருந்தாலும்;
புலம்பல் வந்தால்;
அழுதுக்கொண்டேச்;
சிறைப்பிடிப்பாய் என்
பிடறியை!

இன்று;
மணக்கோலத்தில்
மணப்பெண்ணாய் நீ;
எதற்கு என்றேத் தெரியாமல்;
குலுங்கி அழும்
என் தோள்கள்;

பீறிட்டுவரும் கண்ணீருக்குக்
காரணம் தெரியாமல்;
விழிச் சிவந்து நிற்கும்!

எங்களோடு ஒட்டி இருந்த
உன்னை பிய்த்துப் பிடிங்கி
வழியனுப்புகிறேன் நீ
வாழும் வீட்டிற்கு!

ஒவென்று அழும் மனமும்;
ஒவென்றுப் போன வீட்டின்
கலகலப்பும்;
கிறுக்குப்பிடித்த என் மனம்;
எடுத்துபார்ப்பேன் உன்
சிறுப்பிள்ளை ஆடையைக்
கண்ணீருடன்!

ஓட்டுமொத்தக் உன் கரமும்
ஒளிந்துக்கொள்ளும்
என் விரலில்;
உன் பிஞ்சிக் கால்களைக்;
என் கன்னத்தில் வைத்து;
முத்தமிட்டு அழுவேன்!

செல்லமாய் நீ இருந்ததால்;
என் மார்பு உனக்கு
தலையணையாய்;
தூங்கிய உன்னைத்;
தூக்க மனமில்லாமல்;
தூங்கிப்போவேன் நானும்!

பள்ளித் திரும்பி;
வீடுச் சேர்ந்ததும்;
மூலைக்குப் போகும்;
உன் புத்தகமூட்டை;
உன் மூளைத் தேடும்
என்னை!

பூப்பெய்திருந்தாலும்;
புலம்பல் வந்தால்;
அழுதுக்கொண்டேச்;
சிறைப்பிடிப்பாய் என்
பிடறியை!

இன்று;
மணக்கோலத்தில்
மணப்பெண்ணாய் நீ;
எதற்கு என்றேத் தெரியாமல்;
குலுங்கி அழும்
என் தோள்கள்;

பீறிட்டுவரும் கண்ணீருக்குக்
காரணம் தெரியாமல்;
விழிச் சிவந்து நிற்கும்!

எங்களோடு ஒட்டி இருந்த
உன்னை பிய்த்துப் பிடிங்கி
வழியனுப்புகிறேன் நீ
வாழும் வீட்டிற்கு!

ஒவென்று அழும் மனமும்;
ஒவென்றுப் போன வீட்டின்
கலகலப்பும்;
கிறுக்குப்பிடித்த என் மனம்;
எடுத்துபார்ப்பேன் உன்
சிறுப்பிள்ளை ஆடையைக்
கண்ணீருடன்!

2 comments: