மாதச் சம்பளம்உழைப்பிற்கு ஊதியமாய்
களைப்பிற்கு உற்சாகமாய்
மாதச்சம்பளம்;
வாங்கியதும் வீங்கிய
கடமைக்குத் தீனியாய்!

கட்டிப்பிடித்து ஒட்டிப் பார்த்தாலும்
ஒட்டாமல் ஒடும்
ஒட்டப்பந்தய சூரனாக!

மலறும் முகம்
மணிக்கணக்கிற்குத்
தாங்காது;
மணியும் என்
கணக்கிற்கேப் போகாது!

கர்ணம் போட்டு வண்ண
வண்ணமாய் கனவுகள்
கண்டாலும்;
தங்காது தங்கம்
விற்கும் விலைக்கு!

எப்போதாவது ஏறும் சம்பளம்;
ஒட்டிபிறந்த உடன்பிறப்பாய்
கூடவே என் தேவைகளும்!
ஆறுதலாய் பணம் அனுப்பிய
ரசீது மட்டும் என் கையில்!


உழைப்பிற்கு ஊதியமாய்
களைப்பிற்கு உற்சாகமாய்
மாதச்சம்பளம்;
வாங்கியதும் வீங்கிய
கடமைக்குத் தீனியாய்!

கட்டிப்பிடித்து ஒட்டிப் பார்த்தாலும்
ஒட்டாமல் ஒடும்
ஒட்டப்பந்தய சூரனாக!

மலறும் முகம்
மணிக்கணக்கிற்குத்
தாங்காது;
மணியும் என்
கணக்கிற்கேப் போகாது!

கர்ணம் போட்டு வண்ண
வண்ணமாய் கனவுகள்
கண்டாலும்;
தங்காது தங்கம்
விற்கும் விலைக்கு!

எப்போதாவது ஏறும் சம்பளம்;
ஒட்டிபிறந்த உடன்பிறப்பாய்
கூடவே என் தேவைகளும்!
ஆறுதலாய் பணம் அனுப்பிய
ரசீது மட்டும் என் கையில்!

1 comment:

  1. ஆறுதலாய் பணம் அனுப்பிய ரசீது மட்டும்.....வலிக்கிறது .தேவைகள் கூடக் கூட செலவுகளும் கூடுகிறது .
    ஆனால் மாதச் ச்ம்பளம் மட்டும் கூடுவதில்லை . ஊருக்கு போகும் போது எஞ்சுவது வெறுமை.. நண்பா கொஞ்சம் சேமித்து பழகவும்.

    ReplyDelete