மசக்கை..ஆண்மைக்கு இனிப்புக்கொடுத்து;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
மசக்கை என்று;
பிரிந்துச் சென்ற உதடுகளும்
சுருங்கிப்போன இதயமுமாக நான்!

உறவுகள் குழந்தைக்குப்
பெயர் தேடிப்;
பக்கங்களை திண்றுக்கொண்டிருக்க;
இணையத்திலும்;
இணைந்த நண்பர்களிடமும்
பெயர் வேட்டை
நான் இங்கு நடத்த!

ஆணா!பெண்ணா என
ஆராய்ச்சி நடக்க;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
வந்திடுங்க!

சொன்னதும் சோகம் வெடிக்க;
சிரித்துக்கொண்டே
ஆறுதல் சொல்வேன் உனக்கு!

கேட்டுக் கேட்டு
அலுத்துப்போனாலும்;
அழுதுக்கொண்டேக்
கேட்பாய் மீண்டும்!

ஒட்டியிருக்கும் சோகங்களைப்
போர்வைக்குச் சொந்தமாக்கி;
எல்லோரும் உறங்கியப்பின்னே
எழுந்து அழுதுவிட்டு;
வீங்கியக் கண்ணைத்
துடைத்துவிட்டுத்
தூங்கச் செல்வேன்!ஆண்மைக்கு இனிப்புக்கொடுத்து;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
மசக்கை என்று;
பிரிந்துச் சென்ற உதடுகளும்
சுருங்கிப்போன இதயமுமாக நான்!

உறவுகள் குழந்தைக்குப்
பெயர் தேடிப்;
பக்கங்களை திண்றுக்கொண்டிருக்க;
இணையத்திலும்;
இணைந்த நண்பர்களிடமும்
பெயர் வேட்டை
நான் இங்கு நடத்த!

ஆணா!பெண்ணா என
ஆராய்ச்சி நடக்க;
அழுதுக்கொண்டே நீ சொன்னாய்
வந்திடுங்க!

சொன்னதும் சோகம் வெடிக்க;
சிரித்துக்கொண்டே
ஆறுதல் சொல்வேன் உனக்கு!

கேட்டுக் கேட்டு
அலுத்துப்போனாலும்;
அழுதுக்கொண்டேக்
கேட்பாய் மீண்டும்!

ஒட்டியிருக்கும் சோகங்களைப்
போர்வைக்குச் சொந்தமாக்கி;
எல்லோரும் உறங்கியப்பின்னே
எழுந்து அழுதுவிட்டு;
வீங்கியக் கண்ணைத்
துடைத்துவிட்டுத்
தூங்கச் செல்வேன்!

2 comments:

  1. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி அசோக் குமார் அவர்களுக்கு.

    ReplyDelete