தொப்பை..



முட்டி நிற்கும் தொப்பைக்குக்
கட்டித் தழுவும் குழந்தைகள்;
ஏமாற்றிய வயிருக்கு
நான் கோமாளியாக!

திமிர் கொண்ட தோளும்;
மதம் கொண்டப் புஜமும்;
ஒட்டிய வயிரும்
ஏளனமாய் கதைத்தது;
இளமைப் புகைப்படம் நகைத்தது!


காலங்கள் சுழலக்
கால் நடமாட்டம் ஒய;
குளுக்குளு அறையில்
சுருங்கியது என் சுறுசுறுப்பு!

வயது ஏற;மூச்சு வாங்கப்
பணயமாக இணையத்திற்கு
என் நேரம்!

சொருகியச் சட்டையின் இறுதிப்
பொத்தானும் வெட்கிக்கொண்டு
வெளியே வர;
கட்டிக்கொண்டுக் கதைக்கேட்கும்
மழலைகள் மலைகள் என எண்ணி!

ஒடாதக் கால்களால்
ஒளியாதுத் தொப்பை;
ஒழிக்காதத் தொப்பைகளில்
ஒளிந்துக் கொள்ளும் குப்பையாக
வியாதிகள்!


முட்டி நிற்கும் தொப்பைக்குக்
கட்டித் தழுவும் குழந்தைகள்;
ஏமாற்றிய வயிருக்கு
நான் கோமாளியாக!

திமிர் கொண்ட தோளும்;
மதம் கொண்டப் புஜமும்;
ஒட்டிய வயிரும்
ஏளனமாய் கதைத்தது;
இளமைப் புகைப்படம் நகைத்தது!


காலங்கள் சுழலக்
கால் நடமாட்டம் ஒய;
குளுக்குளு அறையில்
சுருங்கியது என் சுறுசுறுப்பு!

வயது ஏற;மூச்சு வாங்கப்
பணயமாக இணையத்திற்கு
என் நேரம்!

சொருகியச் சட்டையின் இறுதிப்
பொத்தானும் வெட்கிக்கொண்டு
வெளியே வர;
கட்டிக்கொண்டுக் கதைக்கேட்கும்
மழலைகள் மலைகள் என எண்ணி!

ஒடாதக் கால்களால்
ஒளியாதுத் தொப்பை;
ஒழிக்காதத் தொப்பைகளில்
ஒளிந்துக் கொள்ளும் குப்பையாக
வியாதிகள்!

1 comment:

 1. //திமிர் கொண்ட தோளும்;
  மதம் கொண்டப் புஜமும்;
  ஓட்டிய வயிரும்
  ஏளனமாய் கதைத்தது;
  இளமைப் புகைப்படம் நகைத்தது!//

  அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete