உண்மை...பிடித்தப் பொய்யால்
பிடிக்காமல் போய்;
ஒளிந்துக் கொள்ளும் மெய்;
உடைத்து எடுக்கும் போது
கசப்பாக்கிக் கடுப்பேற்றும்
உண்மை!

பயமின்றிப்
பறைச்சாற்றும் பொய்;
உண்மையைக் கக்கும்போது
ஒட்டிக்கொளளும் பயம்!

முகம் சிரிக்க மலர் தூவி;
பொன்னாடைப் போர்த்தும்
பொய்யுரைக்கும் போது!

முகம் சுருங்கி உலகம்
முறைத்துவிட்டுச் செல்லும்
மெய் உரைக்கும் போது!

வலித்தாலும் இளிக்க வேண்டாம்
பொய் சொல்ல - தரணிப்
பழித்தாலும் பயம் வேண்டாம்
மெய் சொல்ல!


பிடித்தப் பொய்யால்
பிடிக்காமல் போய்;
ஒளிந்துக் கொள்ளும் மெய்;
உடைத்து எடுக்கும் போது
கசப்பாக்கிக் கடுப்பேற்றும்
உண்மை!

பயமின்றிப்
பறைச்சாற்றும் பொய்;
உண்மையைக் கக்கும்போது
ஒட்டிக்கொளளும் பயம்!

முகம் சிரிக்க மலர் தூவி;
பொன்னாடைப் போர்த்தும்
பொய்யுரைக்கும் போது!

முகம் சுருங்கி உலகம்
முறைத்துவிட்டுச் செல்லும்
மெய் உரைக்கும் போது!

வலித்தாலும் இளிக்க வேண்டாம்
பொய் சொல்ல - தரணிப்
பழித்தாலும் பயம் வேண்டாம்
மெய் சொல்ல!

No comments:

Post a Comment