சோறு
ஊட்டுவதிலிருந்து;
இரவு சொப்பனத்திற்குத்
தள்ளும் வரை;
தவறாமல் பயம் காட்டியேப்
பழக்கப்படுத்திய அன்னை;
மறுப்பேச்சு இல்லாமல்
மாக்கானுக்குப் பயந்து;
அம்மாவின் முந்தாணையில்
ஒளிந்துக்கொண்டு;
போர்வைக்குள் வீரமாய்;
விழிகள் மட்டும் ஈரமாய்!
தந்தியடிக்கும்
உள்ளத்தால்;
நொண்டியடிக்கும்
தைரியம்!
இமை மூடும்
இருளுக்காக;
இருள் கண்டால்;
பயத்தால்
இமைத்திறக்கும்;
பயம் வெடிக்கும்!
மிரட்சிக் கொடுத்தேக்
காரியம் சாதித்த அன்னை;
என் சிறுபிராயத்தில்;
இப்போது
நான் வளர்ந்தப் பின்னே;
வருத்தெடுக்கிறாள்;
ஆண்பிள்ளைகுப் பயமா!
முன்னர் பயத்தை ஊட்டி வளர்த்த அன்னையே
ReplyDeleteஇப்போது அதற்காக வறுத்தெடுப்பது...
வித்தியாசமான சிந்தனை
நல்ல பதிவு.
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை .அனுபவம் பேசும் .இந்த அனுபவம் எல்லோருக்கும் உண்டு . இப்பொழுது குழந்தைகளை பயம் காட்டி வளர்பதில்லை .மிட்டாய் போதும் .
ReplyDeleteஇப்போது
நான் வளர்ந்தப் பின்னே;
வருத்தெடுக்கிறாள்;
ஆண்பிள்ளைகுப் பயமா! ...-இது எனக்கு விளங்கவில்லை