மூலையில் மூளை..


காரணத்தோடு;
சில நேரம்
காரியத்தோடு;
உள்ளம் வெடிக்க;
உதடுகள் துடுக்க;
உறவுகள் அறுபடும்!

முரண்டுச் செய்யும்
கோபத்தால்;
வாசலில் நிற்கும்
பழி உணர்ச்சி;
மூளையின் வேலைநிறுத்தப்
பணியால் முடங்கிப்போகும்
முதிர்ச்சி!

இரண்டு நிமிடச்
சண்டையால்;
இருதயங்கள் கனக்கும்;
இரத்தநாளங்கள் தவிக்கும்;
கெடு கொடுக்கும்
சினத்திற்குத் தடைவிதிப்போம்;
கடைக்கண் பார்வைப்பட்டால்
கதவடைப்போம்!

காரணத்தோடு;
சில நேரம்
காரியத்தோடு;
உள்ளம் வெடிக்க;
உதடுகள் துடுக்க;
உறவுகள் அறுபடும்!

முரண்டுச் செய்யும்
கோபத்தால்;
வாசலில் நிற்கும்
பழி உணர்ச்சி;
மூளையின் வேலைநிறுத்தப்
பணியால் முடங்கிப்போகும்
முதிர்ச்சி!

இரண்டு நிமிடச்
சண்டையால்;
இருதயங்கள் கனக்கும்;
இரத்தநாளங்கள் தவிக்கும்;
கெடு கொடுக்கும்
சினத்திற்குத் தடைவிதிப்போம்;
கடைக்கண் பார்வைப்பட்டால்
கதவடைப்போம்!

2 comments:

 1. "காரணத்தோடு சிலசமயம் காரியத்தோடு"
  சொல்ல நினைப்பதை மிகச் சரியாகச் சொல்லும்
  சொற்திறன் உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
  நல்ல பதிவு.
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  =====>
  நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.
  <===


  .

  ReplyDelete