இறைவேதம்..


கரைப்புறண்டக் கண்ணீர்;
இமைத்தாண்டி வழியும்;
விழியும்;
வலித் தாங்கி நனையும்!

போற்றி;
போர்த்திருக்கும்;
திருமறையை
ஒருமுறையைக் காணுகையிலே!

எட்டிப்பிடிக்கும்
தொலைவினில்;
தொலைக்காட்சியை
இயக்கும் கருவி;
எட்டிப்பார்த்தாலும்
தொடமுடியா உயரத்தில்
நம்மை இயக்கும்
அருள்மறை!

இதில் தீர்வுகள்
இல்லாமல் இல்லை;
இதற்கு நிகர் எதுவுமில்லை;
ஜொலிக்கும் கருத்துகள்
மனதை ஜெயிக்கும்;
ஆழ்ந்து ஊன்றினால்
உள்ளம் லயிக்கும்!

தினமும் பார்த்துச்
செல்ல இது
பொருட்காட்சியல்ல;
முத்தமிட்டு;மனதை
தொட்டுச்செல்லும்
அருள் காட்சி!

கரைப்புறண்டக் கண்ணீர்;
இமைத்தாண்டி வழியும்;
விழியும்;
வலித் தாங்கி நனையும்!

போற்றி;
போர்த்திருக்கும்;
திருமறையை
ஒருமுறையைக் காணுகையிலே!

எட்டிப்பிடிக்கும்
தொலைவினில்;
தொலைக்காட்சியை
இயக்கும் கருவி;
எட்டிப்பார்த்தாலும்
தொடமுடியா உயரத்தில்
நம்மை இயக்கும்
அருள்மறை!

இதில் தீர்வுகள்
இல்லாமல் இல்லை;
இதற்கு நிகர் எதுவுமில்லை;
ஜொலிக்கும் கருத்துகள்
மனதை ஜெயிக்கும்;
ஆழ்ந்து ஊன்றினால்
உள்ளம் லயிக்கும்!

தினமும் பார்த்துச்
செல்ல இது
பொருட்காட்சியல்ல;
முத்தமிட்டு;மனதை
தொட்டுச்செல்லும்
அருள் காட்சி!

2 comments:

 1. தினமும் பார்த்துச் செல்ல
  இது பொருட்காட்சி அல்ல..
  அருட்காட்சி..
  அழகான முத்தாய்ப்பு
  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சித்திக்February 2, 2011 at 9:36 AM

  மனித வாழ்வின் வழிமுறை , இறைமறையாம் திருமறையில் .

  ReplyDelete