ஆறாம் அறிவு..


கருவில் இடம்
கொடுத்த அன்னையும்;
கருத்தில் இடம்
ஒதுக்கியத் 
தந்தையைக் கண்டு;
பாசம் பிதுங்கும்;
விழிகள் ததும்பும்;
திரைப்படம் பார்த்து;

கையேந்தும்
குழந்தையையும்;
யாசகம் கேட்டுப்
படியேறும் முதுமையையும்;
முகம் சுளித்து;
முதுகை காட்டும்;
கதையாய் படித்தால்
மட்டும் கண்ணீர் திக்கும்!

மகிழுந்தின் ஜன்னலில்
மகிழ்ச்சியாய்
வேடிக்கைப் பார்க்க;
வாடிக்கையாளரைப் பிடிக்க;
ஒத்த ஒருபாய் பொருளை;
ஓடி விற்க வரும்
அழுக்குச் சட்டை
வியாபாரியைக் கண்டு;
கரம் சுழற்ற;
கதவுகள் இறுக;
கண்ணாடி உயர;
ஒளிந்துக்கொள்ளும்
ஆறாம் அறிவு!

கருவில் இடம்
கொடுத்த அன்னையும்;
கருத்தில் இடம்
ஒதுக்கியத் 
தந்தையைக் கண்டு;
பாசம் பிதுங்கும்;
விழிகள் ததும்பும்;
திரைப்படம் பார்த்து;

கையேந்தும்
குழந்தையையும்;
யாசகம் கேட்டுப்
படியேறும் முதுமையையும்;
முகம் சுளித்து;
முதுகை காட்டும்;
கதையாய் படித்தால்
மட்டும் கண்ணீர் திக்கும்!

மகிழுந்தின் ஜன்னலில்
மகிழ்ச்சியாய்
வேடிக்கைப் பார்க்க;
வாடிக்கையாளரைப் பிடிக்க;
ஒத்த ஒருபாய் பொருளை;
ஓடி விற்க வரும்
அழுக்குச் சட்டை
வியாபாரியைக் கண்டு;
கரம் சுழற்ற;
கதவுகள் இறுக;
கண்ணாடி உயர;
ஒளிந்துக்கொள்ளும்
ஆறாம் அறிவு!

1 comment:

 1. மனிதன் என பகுத்துக்காட்ட மட்டும்தான்
  ஆறாம் அறிவு .மற்றபடி
  அதன் மனிதத் தன்மையற்ற
  உண்மைத் தன்மையை மிக அழ்காக சித்தரித்திருக்கிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete