இடிந்த தேசத்தில் இருந்து
பகையால் புகையும் தேசம்;
புதைந்த நேசங்களால்
கதறும் பாசம்;

குண்டுச் சப்தத்தால்
சவ்வுகள் அலற;
உறக்கம் எங்களுக்கு
இரக்கமாக இரங்கல்
தெரிவிக்கும்!

நேசநாடுகள்
மோசம் செய்ய;
சுவாசம் செய்ய
வழியில்லாமல்;
வாசம் தேடி
அகதிகளாய்
அநாதைகளாய்!

கனல் தெறிக்கும்
கண்களோடு;
நியாயத்திற்கு
ஏங்கித் தவிக்கும்;
இடிந்த தேசத்தில் இருந்து;
ஒடிந்துப்போனக் குரலுடன்!பகையால் புகையும் தேசம்;
புதைந்த நேசங்களால்
கதறும் பாசம்;

குண்டுச் சப்தத்தால்
சவ்வுகள் அலற;
உறக்கம் எங்களுக்கு
இரக்கமாக இரங்கல்
தெரிவிக்கும்!

நேசநாடுகள்
மோசம் செய்ய;
சுவாசம் செய்ய
வழியில்லாமல்;
வாசம் தேடி
அகதிகளாய்
அநாதைகளாய்!

கனல் தெறிக்கும்
கண்களோடு;
நியாயத்திற்கு
ஏங்கித் தவிக்கும்;
இடிந்த தேசத்தில் இருந்து;
ஒடிந்துப்போனக் குரலுடன்!

No comments:

Post a Comment