எதுவும் இல்லை..கண்பார்வைக்குக்
கிட்டும்முன்னே;
கருவறையிலே
கரைந்தவர்கள் சிலர்;

மலரும்போதே
மரணம்
நுகர்ந்தவர்கள் சிலர்;

சிறகடிக்கும் வயதில்
சிறகொடிந்தவர் சிலர்;
போகின்ற வயதா எனப்
பட்டம் வாங்கியச் சிலர்;
தள்ளாத வயதில்
தடுமாறியவர்கள் சிலர்;

அழுகையோடு அவதானித்த
உன்னைக் கண்டு
ஆர்பரிக்கும் சிரிப்பொலிக்குப்
பெயர் உன் பிறப்பு;
உன் அழுகையோடு
உறவுகளையும்
அழவைத்த உனக்குப்
பெயர் இறப்பு!


கண்பார்வைக்குக்
கிட்டும்முன்னே;
கருவறையிலே
கரைந்தவர்கள் சிலர்;

மலரும்போதே
மரணம்
நுகர்ந்தவர்கள் சிலர்;

சிறகடிக்கும் வயதில்
சிறகொடிந்தவர் சிலர்;
போகின்ற வயதா எனப்
பட்டம் வாங்கியச் சிலர்;
தள்ளாத வயதில்
தடுமாறியவர்கள் சிலர்;

அழுகையோடு அவதானித்த
உன்னைக் கண்டு
ஆர்பரிக்கும் சிரிப்பொலிக்குப்
பெயர் உன் பிறப்பு;
உன் அழுகையோடு
உறவுகளையும்
அழவைத்த உனக்குப்
பெயர் இறப்பு!

3 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

  எதார்த்தத்தை சொல்லும் வரிகள்! படம் மனதை கன‌க்க வைக்கிறது :( ஏதோ ஒரு சம்பவத்தில் எடுத்த படம் மாதிரி உள்ளதே?

  ReplyDelete
 2. சித்திக்February 23, 2011 at 11:50 AM

  மனதை கனக்க வைத்தது!!!

  ReplyDelete
 3. வரிகள் என்னை உங்கள் வலைக்குள் விளசெய்கிறது, உண்மையின் பின்னணியை என் விழும்பில் கொண்டுவருவதன் மூலம்

  ReplyDelete