சிஷேரியன்நம்பிவந்த 
எங்களை பணத்திற்கு 
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க 
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள் 
பணத்தை உருவுகிறாய்!

விழித்து - நான் 
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து 
அடுத்தப் பிள்ளைக்கும் 
கத்தியுண்டென சப்தமில்லாமல் 
உணர்த்தினாயோ! 

கருத்தடைக்கு நாங்கள் 
கறுப்பு கொடிக் 
காட்டுவதாலோ - இப்படி 
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!

வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும் 
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக 
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!

சிசுவென கூறி 
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள் 
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய் 
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு 
உண்டியலையும் உனதாக்கி!

பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?
நம்பிவந்த 
எங்களை பணத்திற்கு 
பகடைக் காய்களாக்கி;
சுக பிரசவத்தை
தடுத்திட நினைத்தாயோ;
என் நரம்புகளெல்லாம்
அறுத்திட துடித்தாயோ!

அனஸ்தடிக் என்றாய்;
அறுத்தெடுக்க 
தனி கட்டணம் என மென்றாய்;
உயிர் பயம் காட்டி;
எங்கள் உள்ளத்தை வாட்டி;
உன் கட்டடத்தை உயர்த்துகிறாய்;
அதற்குதானா எங்கள் 
பணத்தை உருவுகிறாய்!

விழித்து - நான் 
துடித்து ஈன்றாலும்
இரு நாளில் கழிந்திருக்குமே;
இப்படி…
அறுத்தெடுத்து 
அடுத்தப் பிள்ளைக்கும் 
கத்தியுண்டென சப்தமில்லாமல் 
உணர்த்தினாயோ! 

கருத்தடைக்கு நாங்கள் 
கறுப்பு கொடிக் 
காட்டுவதாலோ - இப்படி 
கழுத்தறுக்கிறாய்;
இரண்டுக்கு மேல் இனியில்லை
என தகவல் கொடுக்கிறாய்!

வெள்ளை சட்டைக்குள்
ஒளிந்திருக்கும் 
அரசாங்க அனுமதிப்பெற்ற
முகமூடி கொள்ளையன் நீயோ;
வயிற்றில் கத்தி வைக்க;
பணத்திற்காக 
கழுற்றில் கத்தி வைக்கும்
படித்த திருடனும் நீயோ!

சிசுவென கூறி 
தசைகளை அறுத்தாய்;
என் நரம்புகள் 
ஆயிரக்கணக்கில் ஊனமாக்கி;
இறுதியாய் 
சிஷேரியன் தொகை என
சில ஆயிரங்களுக்கு 
உண்டியலையும் உனதாக்கி!

பணம் மட்டுமே பிரதானமா?
அதற்குதான் இந்த வருமானமா?
மருத்துவ தொழிலிலுக்கு
இது இல்லையா அவமானமா?
நம்பிவரும் என் இனத்திற்கு
இதுதான் வெகுமானமா?


6 comments:

 1. கேள்விகள் சாட்டையடி...

  இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  என்றும் சொர்க்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  ReplyDelete
  Replies
  1. எந்த நேரமும் ஊக்கப்படுத்த நீங்கள் தரும் கருத்து விலைமதிப்பில்லாதது தோழர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே :)

   Delete
 2. வலி கொண்ட நெஞ்சத்தோடு வசை பாடி உள்ளீர்கள்.அனைத்தும் உண்மை.

  ReplyDelete
 3. நம் ஊர் பக்கம் இந்த கொடுமை அதிகம் .நல்ல பதிவு .சிறந்த கவிதை

  ReplyDelete
 4. நம் ஊர் பக்கம் இந்த கொடுமை அதிகம்; அதிலும் நமக்குதான் அதிகம்...

  ReplyDelete