மகள் திருமணம்


உன் சிறுவயதில்
தாலாட்டுப் பாடும் - உன்
தத்தி தத்தி நடைக்கு
மயங்கி விழுந்திருக்கிறேன் பல முறை;

அருகில் இல்லா உன்
அன்னையை அழைக்க ;
உதடு பிதுக்கி; 
கண்கள் கசக்கி கரையும் நேரம்;
என் நெஞ்சைக் கசக்கிப் பிழியும் 
அத்தருணத்திற்கு
ஆறுதல் சொல்லச் 
சிரித்துப் பகடி காட்டுவேன்;
நீ பூரிக்க;

பள்ளிக்குச் செல்ல
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதத்தைத் தோள்களில்
சுமந்தப்படி சுற்றிக் காட்டுவேன்
பள்ளியை உனக்கு;
உன் அழுகை தீரும் வரை;

பத்தாம் வகுப்பு முடிக்கும் போதே
பத்திரமாய் எனைப்
பார்த்துக்கொண்டாய்
இன்னொருத் தாயாய்;

கல்லூரி முடிந்து;
கல்யாணம் உனக்கு;
விட்டுப்பிரிகிற நேரம்;
கனமானது; ரணமானது இதயம்;
சூடானக் கண்ணீரால்;
தேகமும் கொதிக்க;
முதல்முறையாக உன் 
அழுகையை அடக்க 
நான் சிரிக்க முடியாமல்
தவிக்கும் தருணம்; நிச்சயம் ரணம்!உன் சிறுவயதில்
தாலாட்டுப் பாடும் - உன்
தத்தி தத்தி நடைக்கு
மயங்கி விழுந்திருக்கிறேன் பல முறை;

அருகில் இல்லா உன்
அன்னையை அழைக்க ;
உதடு பிதுக்கி; 
கண்கள் கசக்கி கரையும் நேரம்;
என் நெஞ்சைக் கசக்கிப் பிழியும் 
அத்தருணத்திற்கு
ஆறுதல் சொல்லச் 
சிரித்துப் பகடி காட்டுவேன்;
நீ பூரிக்க;

பள்ளிக்குச் செல்ல
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதத்தைத் தோள்களில்
சுமந்தப்படி சுற்றிக் காட்டுவேன்
பள்ளியை உனக்கு;
உன் அழுகை தீரும் வரை;

பத்தாம் வகுப்பு முடிக்கும் போதே
பத்திரமாய் எனைப்
பார்த்துக்கொண்டாய்
இன்னொருத் தாயாய்;

கல்லூரி முடிந்து;
கல்யாணம் உனக்கு;
விட்டுப்பிரிகிற நேரம்;
கனமானது; ரணமானது இதயம்;
சூடானக் கண்ணீரால்;
தேகமும் கொதிக்க;
முதல்முறையாக உன் 
அழுகையை அடக்க 
நான் சிரிக்க முடியாமல்
தவிக்கும் தருணம்; நிச்சயம் ரணம்!


2 comments:

 1. மகளின் அருமை மகளைப் பெறாதவருக்குத்தான் .
  எனக்கு மகளில்லை அதனால் அதனை உணர்ந்து சொல்கிறேன் .இறைவன் அருளால் பேத்தி உண்டு .

  மகன் பணம் ,பொருள் கொடுப்பான் .மகள் பெற்றோருக்கு உடனிருந்து உற்ற நேரத்தில் பணிவிடை செய்வாள் .
  அருமையான கவிதை .அனுபவித்து வந்த கவிதை

  ReplyDelete
  Replies
  1. நன்று உங்களின் மேலான கருத்திற்கு

   Delete