நரம்புகளில் பீறிட்டக் குருதியால்
நிரம்பிய நம் வீர வரலாறுகளைக்
கொட்டமிட்டு; திட்டமிட்டு
மாயமாக்கியது எப்படி..
பாடத்திட்டத்தில் மாயமாகியது எப்படி..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!
என்னோடுப் படித்தவரில் முக்கால்வாசி
அரசாங்க அலுவலில் இருக்க;
நான் மட்டும் ஏன் அயல்நாட்டில் உழைக்க..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!
என்னை அடித்தவன் சிரிக்க;
எதிர்காலம் தரித்திரமாய்..
அலறிய என்னை மட்டும் ஏன் காவல் பிடிக்க;
அறிந்துகொள்ள யுத்தம் செய்வீர்!
வெடித்தகுண்டின் சப்தங்கள்
ஒடுங்குவதற்கு முன்னே
ஊடகத்தின் தர்மம் அலை அலையாய்
“இஸ்லாமியப் பயங்கரவாதம்”;
உள்நோக்கம்
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!
வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது
வரலாறு அறியா சமூகம்;
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்;
அரிவாள்களால் அல்ல அறிவால்!!!
”சுதந்திர
தின வாழ்த்துக்கள்”
ஒரே கொட்டாவி தான் வருகின்றது.
ReplyDeleteஅடுத்த தடவை கொஞ்சம் நல்ல கவிதை எழுத முயற்சி செய்யுங்கள்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்