கட்டிப்பிடித்து ஒர் முத்தம்


மீசையும் தாடியும்
துளிர்விட்டதுமே தூரமாய் நீ!
தோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்
என் தோலுக்குள்ளே ஒளித்திருக்கிறேன்
இனம்புரியா பாசம்…

கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்
என நான் பல தருணம் ஏக்கத்துடன்!
நான் மூச்சுவிடும்போதே
ஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;
பின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே
புலம்புவாய் நீயும் எனைப்போல…
தகப்பனுக்குத் தந்திருக்கலாம்
ஒரு முத்தமாவது என!!

மீசையும் தாடியும்
துளிர்விட்டதுமே தூரமாய் நீ!
தோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்
என் தோலுக்குள்ளே ஒளித்திருக்கிறேன்
இனம்புரியா பாசம்…

கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்
என நான் பல தருணம் ஏக்கத்துடன்!
நான் மூச்சுவிடும்போதே
ஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;
பின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே
புலம்புவாய் நீயும் எனைப்போல…
தகப்பனுக்குத் தந்திருக்கலாம்
ஒரு முத்தமாவது என!!

1 comment: