மாற்றான் தேசம்...


உதிர்ந்தக் காலங்கள்
மலரும் நினைவுகளாக;
அட்டைபோட்டுப்
பத்திரப்படுத்தி என்
பெட்டிற்குள்!

காலங்கள்
மருந்தாகி
மறைந்துப்போய்
மாயமாகிப்போனது!

தொலைவில் நின்றாலும்
வலைப்போட்டுத் தேடும்
என் கண்கள்!

இன்றோ;
உன் குரல் கேட்டாலும்
தடுமாறிக் கேட்கிறேன்
"யார் நீங்கள்" என்று!

மென்றுத் திண்ணும்
நினைவுகளைக்;
கொன்றுப் போடும்
மறதி!

என்றோ ஒரு முறை
சந்தித்தாலும்
யாரோ ஒருவரைப்போல;
முகம் சிரித்து;
கரம் குலுக்கி;
கடந்துச் செல்கிறோம்!

ஆளுக்கொரு நாட்டிற்கு
அடித்துச் செல்லப்பட்டதால்;
அந்நியமானோம்;
அவசர உலகத்தில்
ஐக்கியமானோம்!

உதிர்ந்தக் காலங்கள்
மலரும் நினைவுகளாக;
அட்டைபோட்டுப்
பத்திரப்படுத்தி என்
பெட்டிற்குள்!

காலங்கள்
மருந்தாகி
மறைந்துப்போய்
மாயமாகிப்போனது!

தொலைவில் நின்றாலும்
வலைப்போட்டுத் தேடும்
என் கண்கள்!

இன்றோ;
உன் குரல் கேட்டாலும்
தடுமாறிக் கேட்கிறேன்
"யார் நீங்கள்" என்று!

மென்றுத் திண்ணும்
நினைவுகளைக்;
கொன்றுப் போடும்
மறதி!

என்றோ ஒரு முறை
சந்தித்தாலும்
யாரோ ஒருவரைப்போல;
முகம் சிரித்து;
கரம் குலுக்கி;
கடந்துச் செல்கிறோம்!

ஆளுக்கொரு நாட்டிற்கு
அடித்துச் செல்லப்பட்டதால்;
அந்நியமானோம்;
அவசர உலகத்தில்
ஐக்கியமானோம்!

2 comments:

  1. அந்நியமானோம்;
    அவசர உலகத்தில் .

    ..உண்மை ..சுடுகிறது .
    பதிவுக்கு நன்றி

    ReplyDelete