கொட்டும் முடியைத் 
தடுத்திடத் துடிக்கும்
இளைஞன்; 
மணநாள் வரை!
கொட்டியப் பின்னே
கேலிக்குப் பலியாகும்;
மனைவியின் கவலைக்கு
ஆளாகும்!
குசும்புச் செய்யும் 
குழந்தைக்குக் குதுகூலமாய்;
சொல்லிவிட்டு ஓடிவிட 
ஆனந்தமாய்!
ஒத்தப்பெயர் கொண்டப்
பலபேருக்கு நடுவிலே;
பளிச்சென்று பதில்வரும்
தெருவிற்கு அடையாளாமய்!
விரயமானப் பணத்திலும்
விளையாத நிலமாய்;
வழிந்து விழும் 
எண்ணைக்கு மிச்சமாய்!
சிந்தனைக் கொண்ட 
மனிதருக்கு; 
சீக்கிரத்தில் விழும்; 
எனக் கதைச் சொல்லி;
கொட்டிய முடிக்கு 
ஒட்டுப் போடும் தந்திரம்!
சிறைப்படாதச் சிகைக்கு
வழுக்கைச் சுதந்திரம்!
Tweet

வழுக்கைக்கு கூட கவிதையா?
ReplyDeleteஅருமை