ஈ...


மொய்த்து நிற்கும்
எல்லோரையும்;
மெய்த்துச் சொல்லவைக்கும்
என் பெயர்!

மிச்சம் வைக்கும்
உணவையும்;
எச்சம் வைக்க வருவேன்;
நான் எச்சில் வைத்தப்பின்னே
எல்லோரையும் முத்தமிட
அமர்வேன்!
 
கடிக்காத எனைப்
பிடிக்காத மனிதன்;
துரத்தித் தோற்றேப்போவான்;
அடிக்கமுடியாமல்
அலுத்துத் தினம் போவான்!

கொட்டிக்கிடக்கும் உணவையும்
கூட்டமாய் கொத்த வருவோம்;
வலதுக் கையால் உண்டு;
மனிதன் இடதுக் கையால்
எங்களுக்கு விசிறுவதைக் கண்டு
மகிழ்வோம்!

அசுத்தம் நிறைந்தப்
பகுதியில் குளித்துவிட்டுப்
பறப்போம்;
காதோடு ரீங்காரமிட்டுக்
மனிதனைக் கடுப்பேற்றி ரசிப்போம்!

மொய்த்து நிற்கும்
எல்லோரையும்;
மெய்த்துச் சொல்லவைக்கும்
என் பெயர்!

மிச்சம் வைக்கும்
உணவையும்;
எச்சம் வைக்க வருவேன்;
நான் எச்சில் வைத்தப்பின்னே
எல்லோரையும் முத்தமிட
அமர்வேன்!
 
கடிக்காத எனைப்
பிடிக்காத மனிதன்;
துரத்தித் தோற்றேப்போவான்;
அடிக்கமுடியாமல்
அலுத்துத் தினம் போவான்!

கொட்டிக்கிடக்கும் உணவையும்
கூட்டமாய் கொத்த வருவோம்;
வலதுக் கையால் உண்டு;
மனிதன் இடதுக் கையால்
எங்களுக்கு விசிறுவதைக் கண்டு
மகிழ்வோம்!

அசுத்தம் நிறைந்தப்
பகுதியில் குளித்துவிட்டுப்
பறப்போம்;
காதோடு ரீங்காரமிட்டுக்
மனிதனைக் கடுப்பேற்றி ரசிப்போம்!

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    இன்றுதான் உங்கள் தளம் வந்தேன்.
    எல்லா கவிதையும் அருமையாக எழுதி இருக்கீரகள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சகோ உங்கள் பதிவில் டேட் வைக்கவும்.
    அப்பத்தான் பதிவு எப்ப வெளியிட்டது என்று புரிய முடியும்

    ReplyDelete
  3. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி;இன்ஷா அல்லாஹ் தேதியை தெரியுமாறு செய்துக் கொள்கிறேன்.

    ReplyDelete