பிடித்த மழையை
அணைத்துக் கொள்ள;
பிடித்துக் கொள்ளும்
ஜலதோஷம்!
தும்மினாலும்
நனைந்துவிடுவேன்;
காரணம் சந்தோஷம்!
சிரித்தப் படியே சீண்டி;
மண்ணைத் தொட்டு;
மேனிக் குளிர;
மனதை நனைக்க;
மறையோனின்
மாபெரும் கருணை!
விரண்டு ஓடும்
மழையைக் குழித்தோண்டிப்
புதைத்து வைப்போம்!
விரயமாகும் நீரை
விதைத்து வைத்து
எதிர்காலத்தைச்
செழிக்க வைப்போம்! Tweet

நல்லாயிருக்கு..
ReplyDeleteLittle Drops of Water Make the Mighty Ocean...,
ReplyDeleteSave Water! Save Tamil Nadu!