கிட்ட வரும் 
சொந்தங்களையும் 
எட்டிப்போகச் செய்யும்;
உறங்கிக்கொண்டிருக்கும் 
அமைதியையும்; 
அரக்கத்தனமாய் கொள்ளும்!
உதடு இரண்டும் முட்டி முட்டி 
மூச்சித்திணறும் முத்தம்; 
கைக்குட்டையில் ஒளிந்துக்கொள்ளும்
தும்முகின்றச் சப்தம்!
அடைப்பட்டுப் போன 
மூக்கால்;
தடைபட்டுப் போகும் 
சுவாசம்;
தோற்றுப்போன 
மோப்பத்தால்;
தோல்விக்காணும் வாசம்! 
கோர்த்துக் கொண்ட நீரால்;
தலைக்குக் கனம் ஏறும்;
ஏறிப்போனக் கனத்தால் 
மாறிப்போகும் முகம்!
தும்மிக் கொண்டே இருப்பதால் 
கம்மிப் போகும் குரல்;
தூரல் போடும் வாசலால் 
ஈரமாகும் விரல்! 
கிட்ட வரும் 
சொந்தங்களையும் 
எட்டிப்போகச் செய்யும்;
உறங்கிக்கொண்டிருக்கும் 
அமைதியையும்; 
அரக்கத்தனமாய் கொள்ளும்!
உதடு இரண்டும் முட்டி முட்டி 
மூச்சித்திணறும் முத்தம்; 
கைக்குட்டையில் ஒளிந்துக்கொள்ளும்
தும்முகின்றச் சப்தம்!
அடைப்பட்டுப் போன 
மூக்கால்;
தடைபட்டுப் போகும் 
சுவாசம்;
தோற்றுப்போன 
மோப்பத்தால்;
தோல்விக்காணும் வாசம்! 
கோர்த்துக் கொண்ட நீரால்;
தலைக்குக் கனம் ஏறும்;
ஏறிப்போனக் கனத்தால் 
மாறிப்போகும் முகம்!
தும்மிக் கொண்டே இருப்பதால் 
கம்மிப் போகும் குரல்;
தூரல் போடும் வாசலால் 
ஈரமாகும் விரல்! 
 
 
தோழா உங்கள் படைப்புகள் மென்மேலும் பெருக துஆ செய்கிறேன் இறைவனிடம் இன்ஷா அல்லாஹ் !!
ReplyDelete