பெட்டிகளைப் பார்ததும்
குழந்தைக் குதுகலிக்கும்;
வாசம் வீசும் 
வளைகுடாப் பையை
முகர்ந்துப் பார்த்தே 
புன்முறுவல் கொடுப்பான்!
அன்றேத் திறக்கச்சொல்லி 
அடம்பிடிக்கும் குழந்தையின்
அழுகையை 
ஆறுதல் சொல்லி
அழகாய் ரசிப்பேன்!
எட்டி நிற்கும் பிள்ளை
பெட்டித் திறந்ததும்
வட்டமடிக்கும் அவன்
விழிகள்!
விலையுயர்ந்த சாமன்கள்
அவனிடம் விலைப்போகாததால்
கோவித்துகொண்டு அழ ஆரம்பிப்பான்
அவனுக்குப்பிடித்த ஐந்து ரூபாய் 
மிட்டாய் இல்லாததால்!
மாற்றம் கண்டேன் 
மறு நாளே – எனைக் கண்டு
ஓட்டமெடுப்பான்
பேசமறுப்பான்!
சோர்ந்துப் போன
தோள்களைத் தொங்கவிட்டு;
மனதோடு சொல்லிக்கொள்வேன்
என் அத்தாவிற்கும் 
இப்படித்தானே வலித்திருக்கும்!

//சோர்ந்துப் போன
ReplyDeleteதோள்களைத் தொங்கவிட்டு;
மனதோடு சொல்லிக்கொள்வேன்
என் அத்தாவிற்கும்
இப்படித்தானே வலித்திருக்கும்!//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்